LCU-விற்காக லியோ படத்தில் ஜார்ஜ் மரியான் கேரக்டர் திணிக்கப்பட்டதா? இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்!
Director Lokesh Kanagaraj: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முன்னதாக திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தப் படம் லியோ. இந்தப் படத்தில் நடிகர் ஜார்ஜ் மரியான் கதாப்பாத்திரம் எல்.சி.யு-விற்காக திணிக்கப்பட்டதாக செய்திகள் பரவி வரும் நிலையில் அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற கலாச்சாரத்தை உருவாக்கி வைத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Director Lokesh Kanagaraj). மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன இவர் அதனைத் தொடர்ந்து இயக்கிய அனைத்துப் படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி, நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் மற்றும் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் ஆகியவை லோகேஷ் கனகராஜினி லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் அடங்கும் படங்களாக உள்ளது. இந்த நிலையில் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கூலி படம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இல்லை என்பதையும் அவர் முன்னதாகவே விளக்கி இருந்தார்.
இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படம் வருகின்ற 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு திரையரக்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக களம் இறங்கி உள்ளது. இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.




லியோ படத்தில் ஜார்ஜ் மரியான் கேரக்டர் திணிக்கப்பட்டதா?
அதன்படி கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ம் தேதி நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான படம் லியோ. இந்தப் படத்தில் நடிகர்கள் சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மடோனா செபாஸ்டியன், ஜார்ஜ் மரியான், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த் மற்றும் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர்.
படத்தின் கதையில் நடிகர் விஜயின் குடும்பத்திற்கு போலீஸ் காவல் கேட்டு இருப்பார். அப்போது கைதி படத்தில் போலீஸாக வந்த நடிகர் ஜார்ஜ் மரியானை காவலுக்கு வருவது போல காட்டி இருப்பார்கள். இவரின் கதாப்பாத்திரம் லியோ படத்தில் சினிமாட்டிக் யுனிவர்சிற்காக திணிக்கப்பட்டதாக தகவல்கள் வைரலானது.
Also Read… சோசியல் மீடியாவில் இல்லாத அஜித் குமார்… ஷாலினி இன்ஸ்டாவில் ஃபாலோ செய்யும் ஒரே நடிகர் யார் தெரியுமா?
இந்த நிலையில் இதுகுறித்து பேசிய லோகேஷ் கனகராஜ், லியோ படத்தில் விஜய் கதாப்பாத்திரம் தங்களது குடும்பத்திற்கு ஆபத்து இருக்கிறது என்பதாலும் அந்த ஊரில் இருக்கும் காவல்துறை அதிகாரிகள் மீது நம்பிக்கை இல்லை என்றும் நாம் பேசும் தமிழ் மொழி காவல்துறை அதிகாரி வேண்டும் என்று கேட்டு இருப்பார். அதன் காரணமாக இவரின் கதாப்பாத்திரத்தை உள்ளே கொண்டுவந்தோம் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.
இணையத்தில் வைரலாகும் லோகேஷ் கனகராஜின் பேச்சு:
Q: Is GeorgeMarayan character for forced fit into #LEO for LCU element❓#LokeshKanagaraj: LEO character requests Tamil speaking police officer. Nepoleon character will be popular due to Kaithi & they will tell LEO. I won’t add forced Elements for LCU🤝 pic.twitter.com/zRjGzMoHLS
— AmuthaBharathi (@CinemaWithAB) August 5, 2025
Also Read… தேசிய விருதுகளை குவித்த பார்க்கிங் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?