தேசிய விருதுகளை குவித்த பார்க்கிங் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
Parking Movie OTT Update: கடந்த 2023-ம் ஆண்டிற்கான தேதிய விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பார்க்கிங் படத்திற்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

நடிகர் ஹரிஷ் கல்யாண் (Actor Harish Kalyan) நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் பார்க்கிங். இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி இருந்தது. மேலும் இந்தப் படத்தின் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து நடிகர்கள் இந்துஜா மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பிராத்தன நாதன், ராம ராஜேந்திரன், இளவரசு, விஜய் சத்யா, கண்ணாயிரம், வெற்றிவேல் ராஜா ஆகியோர் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் இரண்டு நபர்களுக்கு இடையே வரும் ஈகோ பிரச்னையால் அவர்கள் வாழ்க்கையில் என்ன எல்லாம் நடக்கிறது எத்தனை பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பதே படத்தின் கதை. இந்தப் படத்திற்கு மத்திய அரசு சமீபத்தில் தேசிய விருதுகளை அளித்தது குறிப்பிடத்தக்கது.




பார்க்கிங் படத்தின் கதை என்ன?
காதல் திருமணம் செய்துகொண்ட ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா இருவரும் சென்னையில் எம்.எஸ்.பாஸ்கர் குடியிருக்கும் வீட்டிற்கு மேலே வாடகைக்கு வருகின்றனர். அந்த வீட்டிற்கு வரும்போதே இந்துஜா பிரக்னெண்டாகா இருப்பார். இதனால் அவரை மருத்துமனைக்கு அழைத்து செல்வதற்காக ஹரிஷ் கல்யாண் கார் வாங்குவார். அதனை கீழ் வீட்டில் இருக்கும் எம்.எஸ்.பாஸ்கரின் வீட்டு வாசலில் தான் நிறுத்தி வைப்பார்.
முதலில் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் எம்.எஸ்.பாஸ்கர் அவரது பைக் நிறுத்த இடம் இல்லாமல் போனதால் அதனை பிரச்னையாக மாற்றுகிறார். இதனால் இந்தப் பிரச்னை ஹவுஸ் ஓனரான இளவரசு இடம் செல்கிறது. அவர் கார் வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் அங்கு நிறுத்தலாம் என்று கூறிவிடுகிறார்.
Also Read… யோவ் உன்ன நான் கேட்டனா ? இல்ல… நான் கேட்டனா? – லோகேஷ் கனகராஜ் குறித்து கலகப்பாக பேசிய ரஜினிகாந்த்
இதனால் கடுப்பான எம்.எஸ்.பாஸ்கர் அவரும் வீம்புக்கு என்றே ஒரு காரை வாங்குகிறார். இதனால் தினமும் வீட்டின் கீழே இருக்கும் பார்க்கிங்கில் யார் முதலில் கார் நிறுத்துகிறார்கள் என்பதே போட்டியாக உள்ளது. இது ஒரு கட்டத்தில் ஈகோவாக மாறி இருவரின் வாழ்க்கையையும் வேறு இடத்திற்கு செல்கிறது. இறுதியாக எப்படி இவர்கள் மனது மாறினார்கள் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கின்றது.
பார்க்கிங் படம் குறித்து நடிகர் ஹரிஷ் கல்யாண் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
3 National Awards for the film we put all our honesty, heart and hope into #Parking 🤗
Congratulations to my director @ImRamkumar_B on the “Best Screenplay” Award, Our very own #MSBhaskar sir on “Best Supporting Actor” Award and to the entire team of our film #Parking on “Best… pic.twitter.com/vf2wGDBX8j
— Harish Kalyan (@iamharishkalyan) August 1, 2025