கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்ற தேசிய விருதை வென்ற பார்க்கிங் படக்குழு!
Parking Movie Crew And Kamal Haasan : தமிழ் சினிமாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பார்க்கிங். இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு மட்டும் 3 தேசிய விருதுகள் கிடைத்திருக்கும் நிலையில், நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்துப் படக்குழுவினர் வாழ்த்துகளை பெற்றனர்.

நடிகர் ஹரிஷ் கல்யாணின் (Harish kalyan) முன்னணி நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான திரைப்படம் பார்க்கிங் (Parking). இந்த படமானது முற்றிலும் கிரைம் திரில்லர் கதைக்களத்துடன் வெளியாகி ஒட்டுமொத்த மக்கள் மத்தியிலும் மிகப் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் (Ramkumar balakrishnan) இயக்கியிருந்தார். இது இவரின் இயக்கத்தில் வெளியானமுதல் திரைப்படமாகும். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் குணச்சித்திர நடிகர் எம்.எஸ். பாஸ்கரனும் நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், இப்படத்திற்குத் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருது (National Film Awards), கடந்த 2025, ஆகஸ்ட் 1 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா விரைவில் நடைபெறவுள்ள நிலையில், விருது பெற்றவர்களின் விவரம் வெளியாகியுள்ளது. இந்நிலையில், 3 விருதுகளை வென்ற பார்க்கிங் படக்குழுவை உலகநாயகன் கமல் ஹாசன் (Kamal Haasan) நேரில் அழைத்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்தான நெகிழ்ச்சி பதிவை நடிகர் ஹரிஷ் கல்யாண் வெளியிட்டுள்ளார்.




இதையும் படிங்க ; புஷ்பா பட இயக்குநருடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பேசிய விஜய் தேவரகொண்டா
நடிகர் ஹரிஷ் கல்யாணின் எக்ஸ் பதிவு ;
விருதே வாழ்த்திய தருணம். 🙏
ஒரு நண்பன் போல பேசினீர்கள் . அவருடனான உங்கள் நட்பை பற்றி பேசினீர்கள். உரையாடலா அல்லது யூனிவர்சிட்டி பாடமா. கற்றது பல.. கற்கவேண்டும் உங்களிடம் இருந்து பற்பல. மிகச்சிறந்த புத்தகத்தை படித்த ஒரு கர்வம் அங்கிருந்து விடை பெற்றபொழுது.
எங்களை அழைத்து… pic.twitter.com/QmMHuU6mM5
— Harish Kalyan (@iamharishkalyan) August 3, 2025
இந்த பதிவில் நடிகர் ஹரிஷ் கல்யாண், விருதே வாழ்த்திய தருணம் என நடிகர் கமல்ஹாசனை சந்தித்ததைக் குறித்த எழுதியுள்ளார். மேலும் பார்க்கிங் படக்குழுவை நேரில் சந்தித்தது வாழ்த்தியதற்கு நன்றிகள் என நடிகர் ஹரிஷ் கல்யாண் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : யோவ் உன்ன நான் கேட்டனா ? இல்ல… நான் கேட்டனா? – லோகேஷ் கனகராஜ் குறித்து கலகப்பாக பேசிய ரஜினிகாந்த்
3 விருதுகளை வென்ற பார்க்கிங் திரைப்படம் :
71வது தேசிய திரைப்பட விருதிற்கு, பார்க்கிங் படமானது 3 விருதுகளைப் பெற்றுள்ளது. 2023ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் திரைப்படம் விருதும், இப்படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு சிறந்த திரைக்கதைக்கான விருதும், மற்றும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த எம்.எஸ். பாஸ்கருக்குச் சிறந்த துணை நடிகருக்கான விருதும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படக்குழுவிற்கு தனுஷ் , முதல் பல்வேறு பிரபலங்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நடிகர் கமல் ஹாசன் இந்த படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.