சிறந்த துணை நடிகர், சிறந்த திரைக்கதை, சிறந்த தமிழ் படம் – தேசிய விருதுகளை குவித்த ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங்
National Awards 2025: ' இந்திய அளவில் சிறந்த திரைப்பட கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தேசிய விருதுகளை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய விருது தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழ் படமான பார்க்கிங் விருதுகளை வாரிக்குவித்திருக்கிறது. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இந்திய அளவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக மத்திய அரசு ஆண்டுதோறும் தேசிய விருதுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான 71வது தேசிய விருதுகள் (71th National Film Award) ஆகஸ்ட் 1, 2025 அன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. வழக்கம்போல இந்த ஆண்டும் தமிழ் சினிமாவிற்கு ஏகப்பட்ட விருதுகள் கிடைத்திருக்கின்றன. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் குமார் (G.V.Prakash Kumar) வாத்தி படத்தின் பாடல்களுக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை வென்றிருக்கிறார். அவர் இரண்டாவது முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற பார்க்கிங் திரைப்படம் 3 விருதுகளை வென்றுள்ளது.
விருதுகளை அள்ளிய பார்க்கிக்
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான பார்க்கிங் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. வீட்டின் முன் கார் பார்க்கிங் பிரச்னை என்ற எளிய விஷயத்தை வைத்துக்கொண்டு ஒரு திரைப்படத்துக்கான திரைக்கதையை மிக சுவாரசியமாக உருவாக்கியிருந்தார் ராம்குமார் பாலகிருஷ்ணன். குறிப்பாக ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பு படத்துக்கு ஹைலைட்டாக அமைந்தது. அதிலும் எம்.எஸ்.பாஸ்கர் வில்லத்தனத்தில் மிரட்டியிருந்தார்.
இதையும் படிக்க : 71st National Awards: 71வது தேசிய விருதுகள் அறிவிப்பு.. விருது வென்ற தமிழ் பிரபலங்கள்!




இந்த நிலையில் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை எம்.எஸ்.பாஸ்கருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதே போல சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதும், சிறந்த திரைக்கதை என்ற பரிவில் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு தேசிய விருதும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மிகத் தகுதியான படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டிருப்பதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தமிழில் சிறந்த ஒளிப்பதிவாளர்களுக்கான விருது லிட்டில் விங்ஸ் படத்துக்காக சரவணமருது சௌந்திரபாண்டி மற்றும் மீனாக்ஷி சோமன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் உள்ளொழுகு படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை நடிகை ஊர்வசிக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறந்த நடிகருக்கான விருது ஜவான் படத்துக்காக ஷாருக்கான் மற்றும் 12th Fail படத்துக்காக விக்ராந்த் மாஸ்ஸி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதே போல 12th Fail திரைப்படம் சிறந்த படத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிக்க : 3BHK OTT Update : சித்தார்த்தின் ‘3BHK’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ்.. எப்போது, எங்குப் பார்க்கலாம்?
ராம்குமார் பாலகிருஷ்ணனின் அடுத்த படம்
பார்க்கிங் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் அடுத்ததாக நடிகர் சிலம்பரசன் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. டான் பிக்சர்ஸ் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கவிருந்த இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் சந்தானம் நடிக்கவிருந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சிலம்பரசன் மற்றும் சந்தானம் இணையவிருப்பதாக ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். இந்த நிலையில் சில காரணங்களால் இந்தப் படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.