Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

71st National Awards: 71வது தேசிய விருதுகள் அறிவிப்பு.. விருது வென்ற தமிழ் பிரபலங்கள்!

71st National Film Awards Announcement : பான் இந்திய சினிமாவில் ஆண்டுகளுக்கு பல்வேறு திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்திய அரசின் சார்பாக வழங்கப்படும் விருந்துதான் தேசிய திரைப்பட விருது. இந்நிலையில் இன்று நடைபெற்ற 71வது நேஷனல் விருது அறிவிப்பில், தமிழ் சினிமாவில் விருது வென்றவர்கள் பட்டியல் பற்றி பார்க்கலாம்.

71st National Awards: 71வது தேசிய விருதுகள் அறிவிப்பு.. விருது வென்ற தமிழ் பிரபலங்கள்!
71வது தேசிய திரைப்பட விருதுகள்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 01 Aug 2025 19:28 PM

இந்திய சினிமாவில் ஆண்டுதோறும் நடைபெறும் விருது விழாதான் தேசிய திரைப்பட விருது (National Film Awards). இந்த விருதானது இந்திய அரசாங்கத்தினால், சினிமா துறையினர்களைக் கவுரவிக்கும் பொருட்டு அறிவிக்கப்படுகிறது . இந்த நேஷனல் விருதில் சினிமாவில் சிறந்த படங்கள், இயக்குநர்கள் (Directors) , இசையமைப்பாளர்கள் (Music composer), சினிமோடோகிராபர்ஸ், ஸ்கிரிப்ட் ரைடர்ஸ், நடிகர்கள் (Actors), படங்கள், கலை இயக்குநர், திரைப்படங்கள் என பல்வேறு கேட்டகிரியில் விருதுகள் வழங்கப்படும். இறுதியாகத் தேசிய திரைப்பட விருது விழா கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்றது. இந்த விழாவில் 2022ம் ஆண்டுக்கான திரைப்படங்கள் தொடர்பான விருதுகள் வழங்கப்பட்டது. அந்த வகையில் இந்த 2025ம் ஆண்டு, 71வது நேஷனல் பிலிம்ஸ் விருது (71st National Films Awards) வழங்கும் நிகழ்ச்சிக்கான விருது வென்றவர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 2023ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் சினிமாவில் கலைஞர்கள், திரைப்படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் யார் யாருக்கு எந்தெந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பத விவரமாகப் பார்க்கலாம்.

இதையும் படிங்க : கூலி படத்தின் டிரெய்லர் கூட இன்னும் வெளியாகல… – அனிருத் பகிர்ந்த தகவல்

தமிழ் சினிமாவில் சிறந்த சினிமோட்டோகிராபர் விருது :

71வது தேசிய விருது அறிவிப்பில், சிறந்த தமிழ் சினினிமோட்டோகிராப்ர் விருது, சரவணமுத்து சவுந்தரபாண்டி மற்றும் மீனாட்சி சோமன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. லிட்டில் விங்ஸ் படத்திற்காக , அவர்களுக்குச் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது அறிவித்துள்ளது.

சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்காக விருது ;

2023ம் ஆண்டு வெளியான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருது, ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த இசையமைப்பாளருக்கான விருது :

71வது தேசிய திரைப்பட விருது அறிவிப்பே, 2023ம் ஆண்டு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது, ஜிவி. பிரகாஷ் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷின் வாத்தி படத்திற்காக இந்த விருது அவருக்குக் கிடைத்துள்ளது.

சிறந்த தமிழ் திரைக்கதை நாடகம் :

சிறந்த திரைக்கதைக்கான விருது, ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் பட இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணனுக்குக் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க : ரஜினிக்காக ஒத்தி வைக்கப்பட்ட லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட கிளிம்ப்ஸ் வீடியோ!

சிறந்த துணை நடிகருக்கான விருது :

2023ம் ஆண்டுக்கான சிறந்த துணை நடிகருக்கான விருது, பார்க்கிங் படத்திற்காக நடிகர் எம்.எஸ். பாஸ்கருக்குக் கிடைத்துள்ளது.

சிறந்த நடிகர் விருது :

2023ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான விருது, நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் விக்ராந்த் மாசே- வுக்கு கிடைத்துள்ளது. நடிகர் ஷாருக்கானுக்கு ஜவான் படத்திற்காகவும், விக்ராந்த் மாசேவிற்கு 12த் பெயில் படத்திற்காகவும் கிடைத்துள்ளது.

சிறந்த நடிகை விருது :

2023ம ஆண்டு சிறந்த நடிகைக்கான விருது, நடிகை ராணி முகர்ஜிக்கு கிடைத்துள்ளது. மிர்ஸ் சாட்டர்ஜி vs நார்வே என்ற படத்திற்காக இந்த விருது இவருக்குக் கிடைத்துள்ளது.

சிறந்த இந்தியத் திரைப்படம் :

2023ம் ஆண்டு வெளியான சிறந்த இந்தியத் திரைப்படமாக 12த் பெயில் என்ற இந்தி திரைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த துணை நடிகை விருது :

2023ம் ஆண்டு திரைப்படங்களில் சிறந்த துணை நடிகைக்கான விருது, நடிகை ஊர்வசிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளொழுக்கு என்ற மலையாள படத்திற்காக அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.