சோசியல் மீடியாவில் இல்லாத அஜித் குமார்… ஷாலினி இன்ஸ்டாவில் ஃபாலோ செய்யும் ஒரே நடிகர் யார் தெரியுமா?
Actress Shalini Ajith Kumar: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி பின்பு முன்னணி நடிகையாக மாறியவர் நடிகை ஷாலினி. இவர் நாயகியாக நடித்தப் படங்கள் குறைவு என்றாலும் அந்தப் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மலையாள சினிமாவில் 1983-ம் ஆண்டு வெளியான என்டே மாமாட்டிக்குட்டியம்மாக்கு என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் நடிகை ஷாலினி (Actress Shalini). இவரை அப்போது அனைவரும் பேபி ஷாலினி என்றே அழைப்பார்கள். அறிமுகம் ஆன முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரள அரசின் விருதைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து மலையாளம், தமிழி, தெலுங்கு, கன்னடா மற்றும் இந்தி மொழிகளில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்துள்ளார். இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்தப் பலப் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.1983-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை தொடர்ந்து 7 ஆண்டுகளாக நடிகை ஷாலினி குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த பிறகு நாயகியாக படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
அதன்படி நடிகை ஷாலினி கடந்த 1997-ம் ஆண்டு வெளியான அனியாதிப்ராவு என்ற மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கான காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனார் நடிகை ஷாலினி. இதில் நடிகர் விஜய் நாயகனாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர்கள் அஜித் குமார், மாதவன் மற்றும் பிரசாந்த் ஆகியோர் உடன் இணைந்து நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் நடித்த அனைத்துப் படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.




இன்ஸ்டாகிராமில் நடிகை ஷாலினி ஃபாலோ செய்யும் ஒரே நடிகர்:
இந்த நிலையில் கடந்த 2000-ம் ஆண்டு நடிகர் அஜித் குமாரை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட பிறகு நடிகை ஷாலினி படங்களில் நடிப்பதில் இருந்து விலகிவிட்டார். தொடர்ந்து குடும்பத்தை கவனித்து வரும் நடிகை ஷாலினி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது அதிகார்ப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கினார்.
Also Read… கூலி படத்தில் நடிக்க இப்படிதான் சம்மதித்தேன் – நடிகர் அமீர் கான் ஓபன் டாக்
நடிகர் அஜித் குமார் எந்த சமூக வலைதளப் பக்கத்திலும் இல்லாத போது நடிகை ஷாலினி இன்ஸ்டாவில் பக்கத்தை தொடங்கியபோது ரசிகர்கள் அவரைப் பின் தொடரத் தொடங்கினர். தற்போது 1 மில்லியனுக்கும் அதிகமாக இன்ஸ்டாவில் ஃபாலோவர்ஸ்களை வைத்துள்ள நடிகை ஷாலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் மாதவனை மட்டும் ஃபாலோ செய்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து அழைபாயுதே படத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
நடிகை ஷாலினி இறுதியாக வெளியிட்ட இன்ஸ்டா பதிவு:
View this post on Instagram
Also Read… அஜித்திற்கு மங்காத்தா மாதிரி, நாகர்ஜுனாவிற்கு கூலி – நடிகர் ரஜினிகாந்த்