Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

யூடியூபில் 10 மில்லியன் பார்வைகளை கடந்தது என்ன சுகம் பாடலின் லிரிக்கள் வீடியோ

Enna Sugam - Lyrical | தனுஷின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் இட்லி கடை. இந்தப் படத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு என்ன சுகம் என்ற பாடலின் லிரிக்கள் வீடியோவைப் படக்குழு வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் அந்தப் பாடல் தற்போது யூடியூபில் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

யூடியூபில் 10 மில்லியன் பார்வைகளை கடந்தது என்ன சுகம் பாடலின் லிரிக்கள் வீடியோ
என்ன சுகம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 06 Aug 2025 16:24 PM

நடிகர் தனுஷ் (Actor Dhanush) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் குபேரா. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் தமிழ் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனால் மற்ற மொழியில் இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தனது 52-வது படத்தை நடிகர் தனுஷ் தானே இயக்கி நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போது படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. மேலும் இட்லி கடை என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகை நித்யா மேனன் (Actress Nithya Menon) நாயகியாக நடித்துள்ளார். திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர்களின் ஜோடி மீண்டும் இந்தப் படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து ராஜ்கிரண், அருண் விஜய், சமுத்ரகனி, ஷாலினி பாண்டே, பார்த்திபன் மற்றும் சத்யராஜ் என பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை வுண்டர் பார் நிறுவனம் மற்றும் டான் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

10 மில்லியன் பார்வைகளை கடந்தது என்ன சுகம் பாடல் லிரிக்கள் வீடியோ

இந்த நிலையில் இட்லி கடை படத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 27-ம் தேதி 2025-ம் ஆண்டு என்ன சுகம் என்ற பாடலின் லிரிக்கள் வீடியோவைப் படக்குழு வெளியிட்டது. இந்தப் பாடல் தற்போது யூடியூபில் 10 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. படம் வருகின்ற அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தில் இருந்து அடுத்த அடுத்த அப்டேட்களை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தனுஷ் நடிப்பில் 52-வது படம் வெளியாக காத்திருக்கும் நிலையில் அடுத்ததாக நடிகர் தனுஷி இந்தியில் தனது 53-வது படமான தேரே இஸ்க் மெய்ன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி & விக்ரம் படங்கள் பிடிக்கும் – நடிகர் நாகர்ஜுனா

இட்லி கடை படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… பர்த்டே பேபி மாளவிகா மோகனனின் இன்ஸ்டா ஃபாலோவர்ஸ் எத்தனை லட்சங்கள் தெரியுமா?