Vijay Sethupathi : கடைசி விவசாயி பட இயக்குநருடன் இணையும் விஜய் சேதுபதி – வெப் சீரிஸ் டைட்டில் அறிவிப்பு!
Vijay Sethupathi New Series Update : தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என அனைவராலும் அழைக்கப்பட்டு வருபவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது வெப் தொடர்களிலும் நடிக்கத் தொடங்கியுள்ளார். அந்த வகையில் இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் இவர் நடித்திருக்கும், வெப் தொடரின் டைட்டில் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதியின் (Vijay Sethupathi) நடிப்பில் பல படங்களை வெளியாகி சூப்பர் ஹிட் படமாக அமைந்திருக்கிறது. தமிழைத் தொடர்ந்து தற்போது இந்தி தெலுங்கு போன்ற மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக இயக்குநர் பூரி ஜெகன்நாத் (Puri Jagannadh) இயக்கத்தில் தெலுங்கு மொழியில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தலைவன் தலைவி (Thalaivan Thalavii) . இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான இப்படமானது சுமார் ரூ 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் நடித்திருந்தார். இவர்கள் இருவரின் காமினேஷனில் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி தற்போது, படங்களைக் கடந்து வெப் தொடரிலும் (web series) நடித்து வருகிறார். இயக்குநர் எம். மணிகண்டன் (M.Manikandan) இயக்கத்தில் , இவர் புதிய வெப் தொடரில் நடித்துவருவதாகக் கூறப்பட்ட நிலையில், இந்த தொடரின் டைட்டில் வெளியாகியுள்ளது. இந்த தொடருக்குப் படக்குழு, “முத்து என்கிற காடன்” (Muthu Engira Kataan ) என டைட்டிலை வைத்துள்ளது. தற்போது வெளியான இந்த டைட்டில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதையும் படிங்க : அந்த வாழ்க்கையை வாழவேண்டும் என்ற ஆசை.. லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்!
விஜய் சேதுபதியின் வெப் தொடர் டைட்டில் பதிவு
After Kadaisi Vivasayi, Manikandan is back with a web series – #MuthuEngiraKataan
Stars #VijaySethupathi pic.twitter.com/giQ3DYIqfp
— Haricharan Pudipeddi (@pudiharicharan) August 5, 2025
விஜய் சேதுபதியின் முத்து என்கிற காடன் வெப் தொடர்
இந்த வெப் தொடரில் முன்னணி வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்த தொடரின் ஷூட்டிங் நிறைவடைந்ததாகக் கூறப்படும் நிலையில், டப்பிங் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வெப் தொடரை இயக்குநர் எம். மணிகண்டன் இயக்கியுள்ளாராம். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியின் நடிப்பில், கடந்த 2021ம் ஆண்டு வெளியான கடைசி விவசாயி படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இதை அடுத்ததாக விஜய் சேதுபதியின் நடிப்பில், முத்து என்கிற காடன் என்ற வெப் தொடரையும் இயக்கியுள்ளார்.
இதையும் படிங்க : தலைவன் தலைவி படத்திலிருந்து வெளியானது பொட்டல மிட்டாயே பாடல் வீடியோ!
இந்த தொடரும் கடைசி விவசாயி திரைப்படத்தை போன்ற கதைக்களத்துடன் உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வெப் தொடரை நடிகர் விஜய் சேதுபதிதான் தயாரித்துள்ளார். இவரின் தயாரிப்பில் உருவாகும், 6வது வெப் தொடராக உருவாகியுள்ளது.
முத்து என்கிற காடன் வெப் தொடர் எப்போது ரிலீஸ்
இந்த வெப் தொடரின் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்த நிலையில், டப்பிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வெப் தொடர்ந்து ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனமானது வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ளது. இந்நிலையில், வரும் செப்டம்பர் மாதத்தில் இந்த தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் இதன் ரிலீஸ் குறித்த எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.