Lokesh kanagaraj : அந்த வாழ்க்கையை வாழவேண்டும் என்ற ஆசை.. லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்!
Lokesh Kanagarajs Acting Debut Film Update : : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது ஒரு படத்தில் ஹீரோவாகவும் நடிக்கவுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், தான் நடிக்கவிருக்கும் படத்தின் கதை பற்றியும், அந்த படத்திற்காகச் செய்யும் விஷயங்கள் பற்றியும் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) முதல் தளபதி விஜய் (Thalapathy Vijay) வரை பல்வேறு பிரபலங்களை வைத்து படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj). இவரின் இயக்கத்தில் வெளியான படங்கள் ஒவ்வொன்றும் பல கோடிக்கும் மேல் வசூல் செய்து ஹிட் அடித்திருந்தது. அந்த வகையில் இவரின் இயக்கத்தில் வெளியீட்டிற்குக் காத்திருக்கும் திரைப்படம் கூலி (Coolie). சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தில், அவருடன் பான் இந்திய நடிகர்கள் பலரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தை அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கார்த்தியின் நடிப்பில் (Karthi) கைதி 2 (Kaithi 2) திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
இந்நிலையில், இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், வரும் 2026 ஆம் ஆண்டு சம்மரில் தொடங்குவார் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையில் இவர் இயக்குநர் அருண் மாதேஷ்வரன் (Arun Matheswaran) இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். சமீபத்தில் இப்படத்தைப் பற்றி நேர்காணல் ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜ், படத்தின் கதைக்களம் மற்றும் அதற்காக அவர் செய்யும் விஷயங்கள் பற்றிக் கூறியுள்ளார்.




இதையும் படிங்க : மணிரத்னத்தின் இயக்கத்தில் புதிய படத்தில் இணைகிறாரா துருவ் விக்ரம்? வைரலாகும் தகவல்!
ஹீரோவாக அறிமுகமாகும் படம் குறித்து லோகேஷ் கனகராஜ் பேச்சு
அந்த நேர்காணலில், பேசிய லோகேஷ் கனகராஜ், எனது நண்பர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறேன். இயக்குநர் அருண் கிட்ட பிடித்த விஷயம் என்றால், அவரின் படங்கள் பார்ப்பதற்கு ஆங்கில திரைப்படங்களைப் போல இருக்கும், அவர் அந்த விஷயத்திற்காகத் தீவிரமாகச் செயல்படுவார். மேலும் நானும் ஹீரோவாக நடிப்பதா என்ற குழப்பம் இருந்தது. அதனால் நான் நடிக்கும் படம், ரொம்ப நாள் தள்ளிக்கொண்டே போனது. தற்போது கைதி 2 படத்தின் படப்பிடிப்பிற்கு இன்னும் 8 மாதங்கள் இடைவெளி இருக்கிறது. எனக்கும் இந்த இடைவெளி மிகவும் அவசியமாக இருக்கிறது.
இயக்குநர் அருண் மாதேஷ்வரனின் இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
இதையும் படிங்க : ஏஜென்ட் டீனா கதாபாத்திரத்தை வைத்து வெப் தொடர்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு
ஒரு 3 மாதம் அல்லது 4 மாதமாக கதாநாயகனாக நடிக்கும் படத்திற்காக தயாராக வேண்டும். காலையில் எழுந்து உடற்பயிற்சி போன்ற விஷயங்களைச் செய்யவேண்டியது இருக்கும். எனக்கும் அந்த வாழ்க்கை எப்படி இருக்கும் எனப் பார்க்கவேண்டும் என ஆசை இருந்தது. மேலும் இயக்குநர் அருண் மாதேஷ்வரனுக்கு நான் பெரிய நடிகன் இல்லை என்று தெரியும், அவர்தான் என்னைப் படங்களில் நல்லமுறையில் கையாள்கிறேன் என வாக்குறுதி அளித்திருக்கிறார் என லோகேஷ் கனகராஜ் ஓபனாக பேசியிருந்தார்.