பராசக்தி படத்தில் நான் தான் வில்லனாக நடிக்க வேண்டியது – லோகேஷ் கனகராஜ் சொன்ன சம்பவம்
Director Lokesh Kanagaraj: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது கூலி படத்தின் பணிகளில் பிசியாக இருக்கிறார். மேலும் படத்தின் புரமோஷன் பணிகளுக்கு இடையே அவ்வப்போது பேட்டிகளும் கொடுத்து வருகிறார். அப்படி சமீபத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கோலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இயக்குநர் அருண் மாதேஸ்வரன் (Director Arun Madheswaran) இயக்கத்தில் நடிக்க உள்ளது அனைவரும் அறிந்த செய்தியே. இது தொடர்பாக சமீபத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Director Lokesh Kanagaraj) பல பேட்டிகளிலும் தெரிவித்து இருந்தார். முன்னதாக இவரது இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் லோகேஷ் கனகராஜ் தோன்றி இருப்பார். அந்த காட்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து நடிகை ஸ்ருதி ஹாசன் உடன் இணைந்து ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்து இருந்தார் லோகேஷ் கனகராஜ். அந்த பாடல் வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இவரை நடிகராக நடிக்க வைக்க பல இயக்குநர்கள் முயற்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது. தற்போது கூலி படத்தின் புரமோஷன் பணிகளில் பிசியாக இருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயனின் படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.




பராசக்தி படத்தில் வில்லனாக நடிக்க அழைத்தார்கள்:
அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் பராசக்தி படத்தில் தான் வில்லனாக நடிக்க வேண்டியது என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதன்படி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இயக்குநர் சுதா கொங்கரா அவர்கள் பராசக்தி படத்தின் வில்லனாக நடிக்க என்னை முதலில் அழைத்தார்கள். ஏன் சிவகார்த்திகேயன் கூட ப்ரோ என்ன நம்புங்க. நீங்க இந்த கதாப்பாத்திரத்தை பண்ணினால் சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
Also Read… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அந்தப் படம் மிகவும் பிடிக்கும் – நடிகை ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்
ஆனால் கூலி படத்தின் பணிகளில் நான் பிசியாக இருந்ததால் பராசக்தி படத்தில் என்னால் நடிக்க முடியாமல் போனது. கதை எனக்கு மிகவும் பிடிச்சு இருந்துச்சு. கூலி படத்தின் பணிகள் அதிகமாக இருந்ததாலேயே அந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இணையத்தில் கவனம் பெறும் லோகேஷ் கனகராஜின் வீடியோ:
“I was the one who supposed to do Antagonist character in #Parasakthi🤜🤛. I liked the story very much👌. #Sivakarthikeyan brother also advised to act in it♥️. But i don’t want to take risk in the timeline as it will affect #Coolie🤞”
– #LokeshKanagarajpic.twitter.com/AtgcvduEs3— AmuthaBharathi (@CinemaWithAB) August 5, 2025
Also Read… அமேசான் ப்ரைமில் இருக்கும் 3 BHK படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ