3 நாட்களில் விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தின் வசூல் இவ்வளவா? வைரலாகும் பதிவு
Kingdom Movie Box Office Collection: நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான படம் கிங்டம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்தே ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

நடிகர் விஜய் தேவரகொண்டா (Actor Vijay Deverakonda) நடிப்பில் கடந்த 31-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் கிங்டம். முன்னதாக தொடர்ந்து ரொமாண்டிங் நாயகனாகவும் ஆக்ஷன் நாயகனாகவும் நடித்து வந்த நடிகர் விஜய் தேவரகொண்டா இந்தப் படத்தில் முற்றிலும் வேறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். காவல்துறை அதிகாரியாக உளவு பார்க்க செல்லும் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் வாழ்க்கை அந்த இடத்தில் மாறி அவர் யாருக்கு எதிராக உளவு பார்க்க சென்றாரோ அவர்களுக்கு ஆதவராக மாறுகிறார். அவர் ஏன் அப்படி மாறுகிறார், அவர் அப்படி மாற என்ன காரணம் என்பதே படத்தின் கதை. விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகியுள்ள இந்தப் படத்தை பிரபல இயக்குநர் கௌதம் தின்னுரி இயக்கி உள்ளார். படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்து ரசிகரக்ளிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்தியாவில் மட்டும் இன்றி உலக அளவில் உள்ள ரசிகர்களும் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தைப் பார்த்துவிட்டு தொடர்ந்து தங்களது பாராட்டுகளை இணையதள பங்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் படத்தின் வசூல் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.




கிங்டம் படம் இதுவரை வசூலித்தது எவ்வளவு தெரியுமா?
அதன்படி படத்தின் தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டெர்டெய்ன்மெண்ட் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் படத்தின் வசூல் நிலவரம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் படம் வெளியாகி 3 நாட்களை கடந்துள்ள நிலையில் படத்தின் 3 நாள் வசூல் நிலவரம் உலக அளவில் ரூபாய் 67 கோடிகளை கடந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் 3 நாட்களிலேயே இந்த வசூலை பெற்றுள்ளதால் படம் நிச்சயமாக 100 கோடி வசூல் கிளப்பில் இணையும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இணையத்தில் வைரலாகும் கிங்டம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
A Rampage fit for a King 👑 #Kingdom SMASHES 𝟔𝟕 𝐂𝐫+ 𝐖𝐨𝐫𝐥𝐝𝐰𝐢𝐝𝐞 𝐆𝐫𝐨𝐬𝐬 𝐢𝐧 𝟑 𝐝𝐚𝐲𝐬
& All set to end the weekend with a BLOCKBUSTER houseful Sunday 🤟🏻🎟️ – https://t.co/4rCYFkA5dI#BoxOfficeBlockbusterKingdom@TheDeverakonda @anirudhofficial @gowtam19… pic.twitter.com/3nvQLbeqM2
— Sithara Entertainments (@SitharaEnts) August 3, 2025