Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அந்தப் படம் மிகவும் பிடிக்கும் – நடிகை ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்

Actress Shruti Haasan: நடிகை ஸ்ருதி ஹாசன் நடிப்பில் அடுத்ததாக கூலி படம் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான படங்களில் எது மிகவும் பிடிக்கும் என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அந்தப் படம் மிகவும் பிடிக்கும் – நடிகை ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்
நடிகை ஸ்ருதி ஹாசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Aug 2025 18:09 PM

நடிகை ஸ்ருதி ஹாசன் (Actress Shruti Haasan) நடிப்பில் இறுதியாக தமிழில் வெளியான படம் லாபம். கடந்த 2021-ம் ஆண்டு இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் இந்தப் படம் வெளியாகி இருந்தது. தமிழில் இந்தப் படத்தை தொடர்ந்து வேற எதுவும் நடிகை ஸ்ருதி ஹாசனின் நடிப்பில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தெலுங்கு மற்றும் ஆங்கில மொழிகளில் நடிகை ஸ்ருதி ஹாசனின் படங்கல் தொடர்ந்து வெளியாகி வந்தாலும் தமிழ் சினிமாவில் 4 ஆண்டுகளாக அவரின் நடிப்பில் படங்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை ஸ்ருதி ஹாசனின் நடிப்பில் தமிழில் ஒரு படம் வெளியாக உள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Director Lokesh Kanagaraj) இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த கூலி படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த கூலி படத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடித்துள்ளார். வருகின்ற 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு கூலி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

ரஜினிகாந்த் நடிப்பில் ஸ்ருதிஹாசனுக்குப் பிடித்தப் படம்:

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் செய்தியாளர் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தப் படம் எது என்று கேள்வி எழுப்புகிறார். மேலும் அவரது படங்கள் அனைத்தும் உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன் என்றும் அந்த செய்தியாளர் கூறிகிறார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய நடிகை ஸ்ருதி ஹாசன் எனக்கு ரஜினிகாந்த் சாரோட எல்லா படங்களும் தெரியாது. ஏன் என் அப்பா படங்களே எனக்கு முழுவதும் தெரியாது. அதற்காக நான் வருந்தவும் செய்கிறேன். மேலும் எனக்கு ரஜினிகாந்த் சார் நடிப்பில் வெளியான படையப்பா படம் மிகவும் பிடிக்கும் என்றும் அந்தப் பேட்டியில் நடிகை ஸ்ருதி ஹாசன் தெரிவித்து இருந்தார். இந்த வீடியோ தற்போது ரசிகரக்ளிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.

Also Read… சோசியல் மீடியாவில் இல்லாத அஜித் குமார்… ஷாலினி இன்ஸ்டாவில் ஃபாலோ செய்யும் ஒரே நடிகர் யார் தெரியுமா?

இணையத்தில் கவனம் பெறும் நடிகை ஸ்ருதி ஹாசனின் பேச்சு:

Also Read… தேசிய விருதுகளை குவித்த பார்க்கிங் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?