Lokesh Kanagaraj : டைம் ட்ராவல்.. சையின்ஸ் பிக்ஷன்.. கூலி டிரெய்லர் மீதான ரசிகர்கள் கருத்து – லோகேஷ் கனகராஜ் விளக்கம்
Rajinikanth's Coolie Trailer : தமிழ் சினிமாவில் அனைத்து படங்களிலும் ஹிட் கொடுத்திருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் கூலி. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில், இந்த ட்ரெய்லருக்கு கிடைத்து வரும் விமர்சனங்கள் குறித்து லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார். இது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh kNagaraj) இயக்கத்தில், கமல்ஹாசன் (Kamal Haasan) முதல் தளபதி விஜய் (Thalapathy Vijay) வரை கோலிவுட் சினிமாவின் பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த பட்டியலில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் தற்போது இணைந்துள்ளார். நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் (Super Star Rajinikanth) முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் கூலி (Coolie). இந்த படமானது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 6வது திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் முன்னணி நாயகனாக நடித்திருக்கும் நிலையில், அவருடன் பான் இந்திய நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமானது தயாரித்துள்ளது. மேலும் அனிருத் (Anirudh) இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்தில் மொத்தம் 8 பாடல்கள் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப்படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, தற்போது படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று 2025, ஆகஸ்ட் 4ம் தேதியில் தெலுங்கானாவில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றிருந்தது. அதில் கலந்துகொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கூலி படத்தின் டிரெய்லரை பார்த்து ரசிகர்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு விளக்கமளித்துள்ளார். அது குறித்துப் பார்க்கலாம்.




இதையும் படிங்க : தளபதி விஜய் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது – சிவகார்த்திகேயன்!
கூலி திரைப்பட டிரெய்லருக்கு ரசிகர்கள் ரியாக்சன் குறித்து லோகேஷ் கனகராஜ் விளக்கம்
சமீபத்தில் கூலி படத்தின் தெலுங்கு ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், “கூலி படத்தின் டிரெய்லரை பார்த்துவிட்டு அனைவரும், இது சையின்ஸ் பிக்ஷன் கதையா அல்லது டைம் டிராவல் கதைக்கலாமா என ரசிகர்கள் கூறிவருவதாக நான் தெரிந்துகொண்டேன். இந்தக் கூலி திரைப்படமானது உண்மையில் எந்தை பற்றி என்பதை மக்கள், திரையரங்கில் பார்க்கும்போதும் நிச்சயமாக சர்ப்ரைஸ் இருக்கும். அதைப் பார்ப்பதற்கு நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்” என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அந்த நிகழ்ச்சியில் கூறியிருந்தார். தற்போது லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கும் விளக்கம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் எஸ்.எஸ்.ராஜமௌலி.. – ரஜினிகாந்த் அதிரடி!
ரசிகர்கள் ரியாக்ஷ் குறித்து லோகேஷ் கனகராஜ் பேசிய வீடியோ :
#LokeshKanagaraj Recent
– I used to read all the fan theories everyone thinks it’s a sci-fi or time travel film.
– I’m really excited because people are going to be in for a surprise when they finally see what #Coolie is truly about.#Rajinikanthpic.twitter.com/plKVzY9KTA— Movie Tamil (@MovieTamil4) August 4, 2025
இந்த கூலி படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என பான் இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது. மேலும் இப்படமானது முதல் நாளில் சுமார் 8000 திரையரங்குகளில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இதனால் இப்படமானது முதல் நாளிலே சுமார் ரூ 100 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.