Coolie Trailer : என்னப்பா முடிச்சிரலாமா..! வெளியானது ரஜினியின் கூலி பட ட்ரெய்லர்!
Coolie Movie Trailer : தமிழ் சினிமாவை தொடர்ந்து, ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்துவரும் படம் கூலி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னணி நடிப்பில், அதிரடி ஆக்ஷ்ன் படமாகக் களமிறங்கவுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் நெருங்கும் நிலையில், படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் படு ஹிட்டாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் (Rajinikanth) 171வது திரைப்படமாக உருவாகியிருப்பது கூலி Coolie) இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் (Sun Pictures) நிறுவனம் தயாரிக்க, தென்னிந்தியப் பிரபல இசையமைப்பாளர் அனிருத் (Anirudh) இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இப்படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் முன்னணி நாயகனாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கியுள்ளார். இவர்கள் இருவரின் கூட்டணியில் ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவே எதிர்பார்க்கும் படமாக இந்த கூலி அமைந்துள்ளது. இந்தப் படத்தில் முக்கிய வில்லனாக நடிகர் நாகார்ஜுனா (Nagarjuna) நடித்துள்ளார். மேலும் இவருடன் முக்கிய வேடத்தில் நடிகர்கள் அமீர்கான் (Aamir Khan), உபேந்திரா, சத்யராஜ், சவுபின் ஷாஹிர் மற்றும் நடிகை ஸ்ருதி ஹாசன் என பான் இந்திய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
மேலும் நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) ‘மோனிகா’ என்ற சிறப்புப் பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கும் நிலையில், படக்குழு ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் இன்று 2025, ஆகஸ்ட் 2ம் தேதியில் சென்னையில், “Coolie Unleashed” நிகழ்ச்சியின் போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : தேசிய விருது.. வெற்றிபெற்ற தமிழ் பிரபலங்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து!
அனைவரும் எதிர்பார்த்த கூலி திரைப்படத்தின் ட்ரெய்லர் இதோ
Deva Countdown Starts! The most-anticipated #CoolieTrailer is out now!🔥😎
▶️ https://t.co/y5vtlSuRJT #Coolie releasing worldwide August 14th @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja… pic.twitter.com/iq2Kkzqchn
— Sun Pictures (@sunpictures) August 2, 2025
கூலி படத்திற்கு சென்சார் குழு கொடுத்த சான்றிதழ் :
நடிக ரஜினிகாந்த்தின் நடிப்பில் சுமார் 36 ஆண்டுகளுக்குப் பின் சென்சார் குழு “ஏ” ரேட்டிங் கொடுத்துள்ளது. ரஜினிகாந்த்தின் நடிப்பில் கடந்த 1989ம் ஆண்டு வெளியான சிவா படத்திற்குத்தான், “ஏ” ரேட்டிங் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், 36 ஆண்டுகளுக்குப்பின் இப்படத்திற்கு “ஏ” ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 48 நிமிடங்களாக உள்ளது. லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் இதுவரை வெளியான படங்களில், அதிகம் நேரம் கொண்ட திரைப்படமாகவும் இந்த கூலி அமைந்துள்ளது.
இதையும் படிங்க : நேர்மையான போலீஸ்.. ஜனநாயகன் கதை இதுவா?
கூலி திரைப்படத்தின் புரோமோஷன் பணிகள் :
நடிகர் ரஜினிகாந்த்தின் இந்த கூலி படமானது, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என பான் இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தென்னிந்தியாவில் மட்டுமில்லாமல் , வட இந்தியாவிலும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. மேலும் கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா, ட்ரெய்லர் ரிலீஸ் விழா மற்றும் படத்தின் ப்ரீ – ரிலீஸ் நிகழ்ச்சி எனப் படக்குழு ஒட்டுமொத்தமாக வைத்துள்ளது. இந்த படத்தின் நிகழ்ச்சிகளை மொத்தமாக “Coolie Unleashed” எனப் படக்குழு ஒருங்கிணைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.