Coolie : எனக்கும் சத்யராஜிற்கும் முரண்பாடு இருக்கலாம் – ரஜினிகாந்த் அதிரடி
Superstar Rajinikanth’s Powerful Speech : கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், எவ்வளவு காசு பணம் இருந்தாலும் நிம்மதி இல்லை என்றால் அதனால் எந்த பலனும் இல்லை. மேலும் நான் கண்டக்டரா வேலை பார்த்துட்டு இருந்தபோது, என் நண்பர் தான் தன்னோட செயினை கொடுத்து, நீ சினிமாவில் நடிக்க சொன்னான். அதனால் தான் நான் இங்க இருக்கறேன் என்றார்

கூலி (Coolie) படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 2, 2025 அன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் நடிகர் ரஜினிகாந்த்துடன் நடிகர் ஆமிர்கான் (Aamir Khan), நாகார்ஜூன், சௌபின் சாஹிர், அனிருத், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இந்தப் படத்தின் டிரெய்லரும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. விழாவில் பேசிய நாகார்ஜூனா, இந்தப் படம் நடிகர் ரஜினிகாந்த்திற்கு இன்னொரு பாட்ஷாவாக இருக்கும் என்றார். அப்போது ரசிகர்கள் எழுப்பிய கரவொலியால் அரங்கம் அதிர்ந்தது.
இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது
கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், ”எனக்கு சத்யராஜ்யிற்கும் கருத்து முரண்பாடு இருக்கலாம், ஆனா அவர் மனசுல பட்டதை சொல்லிட்டு போயிருவாரு. மனசுல பட்டதை நேரடியாக சொல்லுறவங்களை நம்பலாம். ஆனால் மனதில் வைத்துக்கொண்டு வெளியில் எதுவும் காட்டாதவங்களை நம்ப முடியாது.




இதையும் படிங்க : பிரபல நடிகர் மதன் பாப் காலமானார் – ரசிகர்கள் இரங்கல்
நான் நாகார்ஜூனாவிடம் அவரது ஃபிட்னஸ் ரகசியம் கேட்டேன் அவர் சிரித்துக்கொண்டே ஒன்னும் இல்ல சார், வொர்க் அவுட் என்றார். நான் எவ்வளவு நாள் தான் நல்லவனா நடிக்கிறதுனு அஜித்துக்கு வெங்கட் பிரபு வசனம் எழுதியிருப்பார். அந்த மாதிரி தான் நாகார்ஜூனா இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். நான் கண்டக்டரா வேலை பார்த்துட்டு இருந்தபோது, என் நண்பர் தான் தன்னோட செயினை கொடுத்து, நீ சினிமாவில் நடிக்க சொன்னான். அதனால் தான் நான் இங்க இருக்கறேன் என்றார். லோகேஷ் ரெண்டு இண்டர்வியூ கொடுத்தார். நான் உக்காந்துட்டு பார்த்தேன் முடியல.. படுத்துட்டு பார்த்தேன் முடியல. லோகேஷ் தான் கூலி படத்தின் ரியல் ஹீரோ. எவ்வளவு காசு பணம் இருந்தாலும் நிம்மதி இல்லை என்றால் அதனால் எந்த பலனும் இல்லை” என்றார்.
கூலி படத்தின் டிரெய்லர்
For the eternal love we all have, this is from all of us to you, #Thalaivar @rajinikanth sir! ❤️❤️❤️https://t.co/QVmZlGM1G1#CoolieTrailer #Coolie
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) August 2, 2025
இதையும் படிங்க : லோகேஷ் கனகராஜ் எந்த படம் பண்ணாலும்… அனிருத் அதிரடி!
டிரெய்லரில் ஸ்ருதி ஹாசனிடம் , அவர் உன் அப்பாவா இருக்கலாம். ஆனால் அவன் என் நண்பன் என ரஜினிகாந்த் பேசிய வசனம் ஹைலைட்டாக அமைந்துள்ளது. அது கமல்ஹாசனை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்தப் படம் டைம் டிராவல் படமாக இருக்கலாம் என ரசிகர்கள் டிரெய்லரை வைத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்பது படம் வந்தால் தான் தெரியும். படத்தில் நிறைய ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனையடுத்து படத்துக்கு தணிக்கைத் துறை ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்தப் படத்தின் ரன் டைம் 2 மணி நேரம் 42 நிமிடங்கள் என கூறப்படுகிறது.