Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கூலி ஷூட்டிங் ஸ்பாட்டில் ஸ்ருதி ஹாசனுக்கு ஸ்வீட் ஊட்டி விட்ட ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் சொன்ன சம்பவம்

Director Lokesh Kanagaraj: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூலி படத்தின் புரமோஷன் பணிகளி தற்போது விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களைப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.

கூலி ஷூட்டிங் ஸ்பாட்டில் ஸ்ருதி ஹாசனுக்கு ஸ்வீட் ஊட்டி விட்ட ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் சொன்ன சம்பவம்
கூலிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Aug 2025 19:14 PM

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Director Lokesh Kanagaraj) இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் கூலி. இந்தப் படம் வருகின்ற 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முன்னதாக கடந்த 2-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைப்பெற்றது. இந்த விழாவில் படத்தில் நடித்த நடிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், அமீர் கான், நாகர்ஜுனா, ஷௌபின் ஷாகீர் மற்றும் உப்பேந்திரா ராவ் ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களுடன் இணைந்து படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

இதில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் நாகர்ஜுனா ஆகியோர் பேசியது இணையத்தில் அதிகமாக வைரலானது. ரசிகரக்ளிடையே கவனத்தையும் ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து படத்தின் புரமோஷனுக்காக பல பேட்டிகளை கொடுத்து வருகிறார். அப்படி அவர் பேசியதில் தற்போது ஒரு விசயம் இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.

கூலி ஷூட்டிங் ஸ்பாட்டில் ஸ்ருதி ஹாசனுக்கு ஸ்வீட் ஊட்டி விட்ட ரஜினி:

கூலி படத்தின் ஷூட்டிங் பணிகள் நடைப்பெற்று வரும் போது நடிகர் ரஜினிகாந்த் ஸ்பாட்டில் என்ன செய்துக்கொண்டிருபார் என்பது குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியிருந்தார். அதில் நடிகர் ரஜினிகாந்த் பெரும்பாலும் அவருக்கு ஷூட் இல்லை என்றால் கேரவனில் அவரது டீம் உடன் அமர்ந்து பேசுவது அல்லது வேறு நடிகர்கள் நடிக்கிறார்கள் என்றால் அவர்களின் நடிப்பை மானிட்டரில் பார்த்துவிட்டு அவர்களுக்கு வாழ்த்துவது என்று செய்து வருவார். அவர் ஒரு நாளும் போன் பயன்படுத்தி நான் பார்த்தது இல்லை என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய லோகேஷ் கனகராஜ், இப்படி இருக்கையில் ஒருநாள் ரஜினி சார் இல்லாத போது நடிகை ஸ்ருதியின் காட்சிகள் படமாக்கப்பட்டது. அடுத்த நாள் நான் அதை ரஜினி சார்கிட்ட போட்டு காமிச்சேன். அன்னைக்கு ஷூட் முடிச்சுட்டு ஸ்ருதி கிளம்பிட்டாங்க. அடுத்த நாள் ஸ்ருதி வந்ததும் அவருக்காக ஸ்வீட் வரவைத்து ரஜினி சாரே ஸ்ருதிக்கு ஊட்டி விட்டார். உங்க நடிப்பு அருமையாக இருக்குனு அவங்கள பாராட்டவும் செஞ்சார் என்று லோகேஷ் கனகராஜ் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Also Read… பர்த்டே பேபி மாளவிகா மோகனனின் இன்ஸ்டா ஃபாலோவர்ஸ் எத்தனை லட்சங்கள் தெரியுமா?

இணையத்தில் வைரலாகும் லோகேஷ் கனகராஜின் பேச்சு:

Also Read… பராசக்தி படத்தில் நான் தான் வில்லனாக நடிக்க வேண்டியது – லோகேஷ் கனகராஜ் சொன்ன சம்பவம்