மாளவிகா மோகனனின் பர்த்டே ஸ்பெஷல்… போஸ்டர் வெளியிட்ட ஹிருதயப்பூர்வம் படக்குழு!
HBD Malavika Mohanan: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். இன்று இவர் பிறந்த நாள் கொண்டாடும் நிலையில் இவர் தற்போது நடித்து வரும் படங்களில் இருந்து புதிய போஸ்டர்களை வெளியிட்டு படக்குழு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றது.

மலையாள சினிமாவில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் நடிகையாக தனது வாழ்க்கையை தொடங்கியவர் நடிகை மாளவிகா மோகனன் (Actress Malavika Mohanan). இவர் தற்போது மலையாளம் மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் இந்தி மொழிகளில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை மாளவிகா மோகனன் இன்று ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி 2025-ம் ஆண்டு தனது 34-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் இவர் தற்போது நடித்து வரும் படங்களின் படக்குழுவினர் புதிதாக போஸ்டர்களை வெளியிட்டு நடிகை மாளவிகா மோகனனின் பிறந்த நாளிற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அந்த வரிசையில் நடிகை மாளவிகா மோகனன் தற்போது மலையாள சினிமாவில் நடித்து வரும் ஹிருதயபூர்வம் படக்குழுவினரும் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு நடிகை மாளவிகா மோகனனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த ஹிருதயபூர்வம் படத்தில் நாயகனாக நடிகர் மோகன்லால் நடித்து வருகிறார். இவர் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் ஹிருதயபூர்வம் படக்குழுவினர் உருவாக்கிய போஸ்டரை வெளியிட்டு நடிகை மாளவிகா மோகனனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அந்தப் பதிவு தற்போது ரசிகரக்ளிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.




நடிகர் மோகன்லால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Happy Birthday, Malavika Mohanan😊#Hridayapoorvam #August28 #onam2025#SathyanAnthikad @antonypbvr @MalavikaM_ #sangeethprathap @aashirvadcine @AVDdxb#sonuTP #akhilsathyan #anoopsathyan pic.twitter.com/Q6FKEXzwmP
— Mohanlal (@Mohanlal) August 4, 2025
Also Read… ராஞ்சனா படத்தின் ரீ ரிலீஸில் ஏஐ க்ளமேக்ஸ் என்னை மிகவும் வருத்தமடைய செய்தது – தனுஷ்!
மோகன்லால் – மாளவிகா மோகனின் நடிப்பில் உருவாகும் ஹிருதயப்பூர்வம் படம்:
இயக்குநர் சத்யன் அந்திகாடு இயக்கத்தில் மலையாள சினிமாவில் ஃபேமிலி ட்ராமாவாக உருவாகி வரும் படம் ஹிருதயப்பூர்வம். இந்தப் படத்தில் நடிகர் மோகன்லால் நாயகனாக நடிக்க மாளவிகா மோகனன் மற்றும் சங்கீத் பிரதாப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இவரக்ளுடன் இணைந்து நடிகர்கள் சங்கீதா மாதவன் நாயர், சித்திக், லாலு அலெக்ஸ், ஜனார்த்தனன், சபிதா ஆனந்த், பாபுராஜ், நிஷான் மற்றும் எஸ்.பி.சரண் ஆகியோரும் நடித்துள்ளனர்.
பிரபல தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூரின் ஆசீர்வாத் சினிமாஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. படம் இந்த 2025-ம் ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read… திருமணம் குறித்து யோசிச்சாலே பயமா இருக்கு – நடிகை ஸ்ருதி ஹாசன்!