Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Ajith Kumar : அஜித் குமாரின் ‘AK64’ படத்தின் நியூ அப்டேட்.. ரசிகர்களுக்குக் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

AK64 Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் அஜித் குமார். இவரின் நடிப்பில் இறுதியாக குட் பேட் அக்லி படம் வெளியாகி பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படத்தைத் தொடர்ந்து, மீண்டும் அதே கூட்டணியில் AK64 படத்தில் நடிக்கவுள்ளார். தற்போது இப்படத்திலிருந்து சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

Ajith Kumar : அஜித் குமாரின் ‘AK64’ படத்தின் நியூ அப்டேட்.. ரசிகர்களுக்குக் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் அஜித் குமார்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 03 Aug 2025 16:04 PM

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் அஜித் குமார். இவரின் நடிப்பில் இதுவரை 63 படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த 2025ம் ஆண்டு மட்டும் இவரின் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரு திரைப்படங்கள் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தது.  இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படமானது, எதிர்பார்த்ததை விடவும் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.  இந்த படத்தை அடுத்ததாக மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன், AK64 படமானது உருவாகவுள்ளது. இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பாக ராகுல் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், இந்த 2025 ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், இந்த படத்திலிருந்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிவருகிறது. ஆனால் இந்த தகவல்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கூலி படத்தில் நடிக்க இப்படிதான் சம்மதித்தேன் – நடிகர் அமீர் கான் ஓபன் டாக்

ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட அஜித் புகைப்படம் பதிவு :

அஜித் குமாரின் 64வது திரைப்படம் :

நடிக அஜித்தின் 64வது திரைப்படத்தை இயக்கவுள்ளதாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த புதிய படத்தை ரோமியோ பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த புதிய படமானது முற்றலும் ஆக்சன் காட்சிகள் நிறைந்த படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த புதிய படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கவுள்ளதாகவும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இதையும் படிங்க : சூர்யாவின் 46வது படத்தில் இணையும் விடுதலை பட நடிகை? வைரலாகும் தகவல்!

இந்நிலையில், இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது . இந்த தகவலானது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 2025 நவம்பர் மாதத்தில் தொடக்கவுள்ள நிலையில், படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.