Malavika Mohanan : மாளவிகா மோகனனின் பிறந்தநாள்.. ‘சர்தார் 2’ படக்குழு வெளியிட்ட போஸ்டர் வைரல்!
Malavika Mohanan Birthday : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் மாளவிகா மோகனன். இவரின் நடிப்பில் தமிழில் உருவாகியிருக்கும் படம் சர்தார் 2. இன்று 2025, ஆகஸ்ட் 4ம் தேதியில் இவர் தனது பிறந்தநாளைக் கொண்டாட வருகிறார். இந்நிலையில், இவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், சர்தார் 2 படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. தற்போது வெளியான இந்த போஸ்டரானது ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது.

நடிகை மாளவிகா மோகனனின் (Malavika Mohanan) நடிப்பில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது. இவர் தமிழ் மலையாளம் , தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் தளபதி விஜய்யின் (Thalapathy vijay), மாஸ்டர் (Master) படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்து மக்களுடைய பிரபலமானார். இதை அடுத்து பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும் நடிகர் கார்த்தியின் (Karthi) முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் சர்தார் 2 திரைப்படத்தில் முன்னணி கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த 2025, ஜூன் ஆரம்பத்தில் நிறைவடைந்திருந்தது. இதை அடுத்து அவர், புகைப்படங்களைப் பகிர்ந்து தனது அனுபவத்தையும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று 2025, ஆகஸ்ட் 4ம் தேதியில், நடிகை மாளவிகா மோகனன் தனது 32வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இந்நிலையில், இவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் விதத்தில், சர்தார் 2 படக்குழுவானது புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. தற்போது வெளியான இந்த போஸ்டரானது ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : தேசிய விருதிற்கு பிறகு பொறுப்பு அதிகரித்துள்ளது – இயக்குநர் ராம்குமார்
சர்தார் 2 படக்குழு வெளியிட்ட மாளவிகா மோகனனின் போஸ்டர் :
We at @Prince_Pictures and team #Sardar2 wish @MalavikaM_ a very happy birthday. Here’s to big successes. pic.twitter.com/0r6B8PHPbp
— Prince Pictures (@Prince_Pictures) August 4, 2025
சர்தார் 2 திரைப்படம் :
நடிகர் கார்த்தியின் முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சர்தார் 2. இந்த படத்தைத் தமிழ் பிரபல இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கியுள்ளார். இந்த சர்தார் 2 திரைப்படமானது , கடந்த 2022ம் ஆண்டு வெளியான சர்தார் 1 படத்தின் தொடர்ச்சி கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் கார்த்தி, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் மற்றும் முக்கிய வேடத்தில் நடிகர் எஸ். ஜே. சூர்யா என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது வரும் 2025 தீபாவளி அல்லது 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையோடு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கமல்ஹாசன்தான் எனது வழிகாட்டி.. மேடையில் எமோஷனலாக பேசிய சூர்யா!
மாளவிகா மோகனனின் புதிய திரைப்படங்கள் :
நடிகை மாளவிகா மோகனன், தமிழில் சர்தார் 2 படத்தை தொடர்ந்து, தெலுங்கில் தி ராஜா சாப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் பிரபாஸின் முன்னணி நடிப்பில் உருவாகிவரும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் மலையாளத்தில் நடிகர் மோகன்லாலின் ஹிருதயபூர்வம் என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த படமானது வரும் 2025, ஆகஸ்ட் 28ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.