Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நடிகர்கள் சூர்யா – ஜோதிகா குழந்தைகளுக்கு பிடித்த நடிகர் இவரா?

Star Couple Suriya and Jyothika: தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகள் பலர் உள்ளனர். அதில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஜோடிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்தப் பட்டியளில் உள்ளவர்கள் நடிகர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர்கள் சூர்யா – ஜோதிகா குழந்தைகளுக்கு பிடித்த நடிகர் இவரா?
குடும்பத்தினருடன் நடிகர் சுர்யாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Aug 2025 20:06 PM

பழம்பெரும் நடிகர் சிவக்குமாரின் மகனாக சினிமாவில் அறிமுகம் ஆனார் நடிகர் சூர்யா (Actor Suriya). இவர் கடந்த 1997-ம் ஆண்டு இயக்குநர் வசந்த் இயக்கத்தில் வெளியான நேருக்கு நேர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகர் விஜயும் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அறிமுகம் ஆன முதல் படமே சூர்யாவிற்கு நல்ல வரவேற்பைப் பெற்றது தொடர்ந்து அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார். அதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா தனது 5-வது படத்திலேயே நடிகை ஜோதிகா உடன் இணைந்து நடித்தார். 1999-ம் ஆண்டு வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் இணைந்து நடித்த இவர்களுக்கு இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அந்த நட்பு காதலாக மாறியது.

தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. இதனைத் தொடர்ந்து இவர்களின் காதல் செய்திகளில் கிசுகிசுவாகவும் வரத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் குடும்பத்தினருடன் சம்மதத்துடன் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர்.

சூர்யா – ஜோதிகா குழந்தைகளுக்குப் பிடித்த நடிகர்:

அதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதிக்கு தியா என்ற பெண் குழந்தையும் தேவ் என்ற ஆண் குழந்தையும் இருக்கிறார். இதில் தற்போது மகள் தியா பள்ளி கல்வியை முடித்துவிட்டு அடுத்ததாக மேல் படிப்பிற்காக வெளிநாடு செல்ல உள்ளார் என்று நடிகர் சூர்யா சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார். மேலும் மகன் தேவ் தற்போது பள்ளி படிப்பை படித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் சூர்யா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது குழந்தைகளுக்கு பிடித்த நடிகர் குறித்து பேசியிருந்தார். அதில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான புலி படத்தைத் தான் அவரது குழந்தைகள் முதன்முதலாக திரையரங்குகளில் சென்று பார்த்தனர். அதனால் புலி அங்கிள் அவங்களுக்கு பிடிக்கும். அப்பறம் கூகுள் கூகுள் பாடலை தற்போது பாடிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் அந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.

Also Read… சோசியல் மீடியாவில் இல்லாத அஜித் குமார்… ஷாலினி இன்ஸ்டாவில் ஃபாலோ செய்யும் ஒரே நடிகர் யார் தெரியுமா?

குடும்பத்தினருடன் நடிகர் சூர்யா வெளியிட்ட இன்ஸ்டா பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Suriya Sivakumar (@actorsuriya)

Also Read… சூர்யாவின் அகரம்  அறக்கட்டளை விழாவில் கலந்துகொண்ட வெற்றிமாறன் – வைரலாகும் வீடியோ!