விவாகரத்து உண்மைதானா? கணவரின் புகைப்படங்களை இன்ஸ்டாவில் இருந்து நீக்கிய ஹன்சிகா மோத்வானி
Actress Hansika Motwani: பான் இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட பிறகு பெரிய அளவில் படங்களில் எதுவும் நடிக்காமல் இருந்தார். இந்த நிலையில் சமீப காலமாக இவர் கணவரை விட்டு பிரிந்துவிட்டதாக செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்தி சினிமாவில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. சுமார் 5 படங்களுக்கு மேலாக குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை ஹன்சிகா மோத்வானி (Actress Hansika Motwani) கடந்த 2007-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் வெளியான தேசமுதுரு என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனார். இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கி இருந்த இந்தப் படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடித்ததற்காக நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம்பேர் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு சினிகாவில் நாயகியாக அறிமுகம் ஆன பிறகு நடிகை ஹன்சிகா மோத்வானி தொடர்ந்து ஹிந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் நாயகியாக நடித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் இயக்குநர் சூரஜ் இயக்கத்தில் வெளியான மாம்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக நடிகை ஹன்சிகா மோத்வானி அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.




முன்னணி நடிகர்களின் நாயகியாக நடித்த ஹன்சிகா மோத்வானி:
அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்கும் ரவி மோகனுடன் இணைந்து எங்கேயும் காதல், நடிகர் விஜயுடன் இணைந்து வேலாயுதம், நடிகர் ஆர்யா உடன் இணைந்து சேட்டை, சித்தார்த் உடன் இணைந்து தீயா வேலை செய்யனும் குமாரு, சிவகார்த்திகேயனுடன் இணைந்து மான் கராத்தே, விஷாலுடன் இணைந்து ஆம்பள, சிம்பு உடன் இணைந்து வாலு என தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானி நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கார்டியன். ஹாரர் படமான இதனை இயக்குநர்கள் குரு மற்றும் சரவணன் ஆகியோர் இணைந்து இயக்கி இருந்தனர். கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
கணவரை பிரியும் நடிகை ஹன்சிகா மோத்வானி?
இந்த நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானி கடந்த 2022-ம் ஆண்டு சோஹேல் கதுரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஹன்சிகாவில் தோழியின் கணவரான இவர் அவர்களுக்கு விவாகரத்து ஆன பிறகு காதல் ஏற்பட்டதாகவும் இருவரின் குடும்பங்களுக்கும் பிடித்துப்போக திருமணம் செய்துகொள்வதாகவும் அவர்கள் அறிவித்தனர்.
ஆனால் திருமணம் முடிந்து 3 ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில் தற்போது இவர்களுக்கு விவாகரத்து ஆக உள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வந்தது. இந்த நிலையில் இதனை உறுதி செய்யும் வகையில் நடிகை ஹன்சிகா மோத்வானி தனது கணவர் சோஹேல் கதுரியா உடன் இருந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… எனது படங்களில் அந்தப் படத்தை 2-வது பாகம் எடுத்தால் மகிழ்ச்சி – நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகை ஹன்சிகா மோத்வானியின் சமீபத்திய இன்ஸ்டா பதிவு:
View this post on Instagram
Also Read… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அந்தப் படம் மிகவும் பிடிக்கும் – நடிகை ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்