Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

‘எந்த பின்புலமும் இல்லாமல்…’ திரையுலகில் 33 ஆண்டுகள் … ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அஜித் அறிக்கை

33 Years Of AJITHISM : நடிகர் அஜித் குமார் திரையுலகில் அடியெடுத்து வைத்து 33 ஆண்டுகளாகிறது. இதனையடுத்து அவர் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில், முழுக்க முழுக்க என் சுய முயற்சியால் மட்டுமே சினிமாத் துறைக்குள் நுழைந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

‘எந்த பின்புலமும் இல்லாமல்…’ திரையுலகில் 33 ஆண்டுகள் … ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அஜித் அறிக்கை
அஜித் குமார்
Karthikeyan S
Karthikeyan S | Published: 03 Aug 2025 19:31 PM

நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) திரையுலகில் அடியெடுத்து வைத்து 33 ஆண்டுகளாகிறது. தமிழில் செல்வா இயக்கத்தில் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான அமராவதி (Amaravathi) திரைப்படத்தில் அறிமுகமானார் அஜித் குமார். அதற்கு முன் தெலுங்கில் பிரேம புஸ்தகம் என்ற படத்தில் நடித்திருந்தாலும் அந்தப் படம் இயக்குநரின் மரணத்தால் தாமதமாகவே வெளியானது. முதல் படமே அவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. எந்த பின்புலமும் இல்லாமல் திரையுலகில் நுழைந்த அவர் தனது கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் முன்னணி ஹீரோக்களில் ஒருவராகவும் வளர்ந்திருக்கிறார். இன்றளவும் அவரது படங்களுக்கு சிறந்த ஓபனிங்கை ரசிகர்கள் அளித்து வருகிறார்கள். இந்த நிலையில் திரையுலகில் 33 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அஜித் குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

‘எந்த பின்புலமும் இல்லாமல் சினிமா துறைக்கு வந்தேன்’

நடிகர் அஜித் குமார் வெளியிட்ட அறிக்கையில், இந்தத் துறைக்கு எந்தப் பின்புலமோ அல்லது யாருடைய சிபாரிசோ இல்லாமல்தான் நுழைந்தேன். முழுக்க முழுக்க என் சுய முயற்சியால் மட்டுமே சினிமாத் துறைக்குள் நுழைந்தேன். காயங்கள், தோல்வி மற்றும் அமைதி என வாழ்க்கை என்னை பல வழிகளில் சோதனைகளை எதிர்கொண்டேன்.. ஆனால், நான் தளர்ந்து போகவில்லை. முயற்சி செய்தேன், மீண்டு வந்தேன். தொடர்ந்து முன்னேறுகிறேன்! ஏனெனில், விடாமுயற்சி என்பதை வெறுமனே நான் கற்றுக் கொள்ளவில்லை. அதை பரிசோதித்து அவ்வண்ணமே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.

இதையும் படிக்க : அஜித் குமாரின் ‘AK64’ படத்தின் நியூ அப்டேட்.. ரசிகர்களுக்குக் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

‘அஜித்குமார் மோட்டார் ரேசிங்’ என்ற பெயரில் 2025 ஆம் ஆண்டு மீண்டும் விளையாட்டுத் துறைக்கு மட்டும் நுழையவில்லை. வயது வரம்பு, அச்சம் தடைகள் இதைப்பார்த்து தங்கள் மீதே சந்தேகம் கொள்பவர்களுக்கு உத்வேகம் கொடுக்கவும்தான் விளையாட்டுத் துறைக்குள் மீண்டும் வந்தேன். என் வாழ்வின் பலம் மனைவி ஷாலினிதான். எல்லா தருணங்களிலும் அவர் என்னுடன் நின்றிருக்கிறார். என் குழந்தைகள் அனோஷ்கா மற்றும் ஆத்விக் இருவரும் என் வாழ்விற்கு அர்த்தம் கொடுத்தவர்கள். சமூகத்தின் மீது அக்கறை கொள்ளும் மனப்பான்மையுடன் என்னை வளர்த்த மறைந்த என் தந்தை பி.எஸ். மணி மற்றும் என் அம்மா மோகினி மணி. என் சகோதரர் மற்றும் என் குடும்பத்தினர் அனைவரின் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : சினிமாவில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித் குமார் – வைரலாகும் ஆதிக் ரவிச்சந்திரனின் எக்ஸ் தள பதிவு!

நடிகர் அஜித் குமாரின் அறிக்கை

 

முன்னதாக நடிகர் அஜித் குமார் திரையுலகில் அடியெடுத்து வைத்து 33 ஆண்டுகளாகும் நிலையில்  அவருடன் பணியாற்றிய இயக்குநர்களான இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சிவா மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் நேரில் சந்தித்தனர். அப்போது இசையமைப்பாளர் அனிருத்தும் அவருடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் அஜித் குமாரின் அடுத்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் நிலையில் அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கவிருக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் சார்பாக ராகுல் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.