Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நாளை வெளியாகிறது வசந்த் ரவியின் இந்திரா படத்தின் ட்ரெய்லர்!

Indra Movie Trailer: நடிகர் வசந்த் ரவி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் இந்திரா. இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் குறித்த அப்டேட்டைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாளை வெளியாகிறது வசந்த் ரவியின் இந்திரா படத்தின் ட்ரெய்லர்!
இந்திராImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Aug 2025 20:00 PM

நடிகர் வசந்த் ரவி (Actor Vasanth Ravi) நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் இந்திரா. இந்தப் படத்தை இயக்குநர் சபரிஸ் நந்தா எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் வசந்த் ரவி உடன் இணைந்து நடிகர்கள் மெஹ்ரின் பிரசன்டா, கல்யாண் மாஸ்டர், சுனில், அனிகா சுரேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான எம்பீரியர் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது குறிப்பிடத்தக்கது. மேலும் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு முன்னதாக அறிவிப்பை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் வசந்த் ரவி நடிப்பில் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த இந்திரா படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் நாளை 09-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு வெளியாகும் என்று படக்குழு தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திரா படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… நடிகையாவதற்கு முன்பு அந்த நடிகரோட நடிக்க அவ்வளவு ஆசைப்பட்டேன் – ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்

நடிகர் வசந்த் ரவி நாயகனாக அறிமுகம் ஆன படம்:

இயக்குநர் ராம் இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் தரமணி. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார் நடிகர் வசந்த் ரவி. நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா இந்தப் படத்தில் நாயகியாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசந்த் ரவியின் நடிப்பும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து நடிகர் வசந்த் ரவி நடிப்பில் வெளியான ராக்கி, அஸ்வின்ஸ், ஜெயிலர், பொன் ஒன்று கண்டேன் மற்றும் வெப்பன் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மகனாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… சினிமாவில் 15 ஆண்டுகள் நிறைவு செய்த அதர்வாவின் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்ஸ் எத்தனை லட்சம் தெரியுமா?