நாளை வெளியாகிறது அருண் விஜயின் ரெட்ட தல படத்தின் டீசர்!
Retta Thala Movie: தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக வந்து தற்போது தனக்கு என ஒரு இடத்தை சினிமாவில் தக்க வைத்துள்ளவர் நடிகர் அருண் விஜய். இவர் தமிழ் சினிமாவில் தற்போது தொடர்ந்து படங்களில் நட்டித்து வருகிறார். இந்த நிலையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ட தல படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவின் நாட்டாமை என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜயகுமாரின் மகன் தான் நடிகர் அருண் விஜய் (Actor Arun Vijay). இவர் கடந்த 1995-ம் ஆண்டு இயக்குநர் சுந்தர் சி இயக்கதில் வெளியான முறை மாப்பிள்ளை படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவர் பலப் படங்களில் நடித்தும் பெரிய அளவில் இவரால் சாதிக்க முடியவில்லை என்றே சொல்லாம். 1995-ல் சினிமாவில் அறிமுகம் ஆகி சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2015-ம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் படம் தான் தமிழ் ரசிகர்கள் மட்டும் இன்றி தென்னிந்திய ரசிகர்கள் அனைவரும் கொண்டாடினர். இந்தப் படத்தில் இவர் நாயகனாக இல்லாமல் வில்லனாக கலக்கி இருந்தார்.இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமார் நாயகனாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் நடித்தப் பிறகு அருண் விஜயின் சினிமா வாழ்க்கை மாறியது என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதனை அருண் விஜய் பல பேட்டிகளில் வெளிப்படையாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு பல படங்கள் அருண் விஜய் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.




ரெட்ட தல படத்தின் டீசர் நாளை வெளியாகிறது:
நடிகர் அருண் விஜய் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் வணங்கான். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இதனைத் தொடர்ந்து தனுஷின் இட்லி கடை படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து தற்போது ரெட்ட தல என்ற படம் தற்போது அருண் விஜய் நடிப்பில் உருவாகி வருகின்றது. இதனை இயக்குநர் கிறிஸ் திருக்குமரன் எழுதி இயக்கி உள்ளார். மேலும் அருண் விஜய் உடன் இணைந்து நடிகர்கள் சித்தி இத்னானி, நிதிஷ் நிர்மல், தன்யா ரவிச்சந்திரன், யோகேஷ் சாமி, ஹரீஷ் பேரடி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ், யோக் ஜபே, வின்சென்ட் அசோகன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த நிலையில் படத்தின் டீசர் நாளை 7-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு வெளியாக உள்ளது.
Also Read… விவாகரத்து உண்மைதானா? கணவரின் புகைப்படங்களை இன்ஸ்டாவில் இருந்து நீக்கிய ஹன்சிகா மோத்வானி
அருண் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
#RettaThala Teaser drops tomorrow !
Get ready for an action packed ride fueled with love and madness 🔥
Produced By- @bbobby @BTGUniversal
Directed By- #KrisThirukumaran
Head of strategy- @ManojBeno@SiddhiIdnani @actortanya #Johnvijay @SamCSmusic @editoranthony @tijotomy… pic.twitter.com/fq4fkA04xM
— ArunVijay (@arunvijayno1) August 6, 2025