Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Arun Vijay: ரெட்ட தல படத்தில் தனுஷ்.. அருண் விஜய் நெகிழ்ச்சி!

Arun Vijay Thanks Dhanush : தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் அருண் விஜய். இவரின் நடிப்பில் தற்போது மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகிவரும் திரைப்படம் ரெட்ட தல. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் நடிகர் அருண் விஜய் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Arun Vijay: ரெட்ட தல படத்தில் தனுஷ்.. அருண் விஜய் நெகிழ்ச்சி!
தனுஷ் மற்றும் அருண் விஜய் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 09 Apr 2025 18:11 PM

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர் விஜயகுமாரின் (Vijayakumar)  மகன்தான், நடிகர் அருண் விஜய் (Arun Vijay). இவர் தற்போது தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் படங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் முன்னணி கதாநாயகனாகவும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாக வணங்கான்  திரைப்படமானது வெளியாகியது. இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் ரிலீசான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை அடுத்தாக நடிகர் அருண் விஜய், இட்லி கடை (Idly Kadai), ரெட்ட தல  (Retta Thala) மற்றும் பார்டர் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் தனுஷின் (Dhanush) இயக்கத்தில் உருவாகிவரும் இட்லி கடை படத்தில், முக்கியமான தோற்றத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து நடிகர் அருண் விஜய், இயக்குநர் கிறிஸ் திருக்குமரன் (Chris Thirukumaran)  இயக்கத்தில் ரெட்ட தல படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார்.

இந்த படமும் கடந்த 2024ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங் சிறப்பாக நடந்து வருகிறது. மேலும் அருண் விஜய்யின் இந்த படத்தில் நடிகர் தனுஷ் காதல் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். அது குறித்தான புகைப்படங்களைச் சமீபத்தில் நடிகர் அருண் விஜய் வெளியிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷை புகழ்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் அருண் விஜய் வெளியிட்ட பதிவு :

இந்த பதிவின் கீழ் நடிகர் அருண் விஜய், “மிகவும் உற்சாகமாக இருக்கிறது, இந்த பாடலை நீங்கள் எப்போது கேட்பீர்கள் என்று ஆர்வமுடன் காத்திருக்கிறேன். சகோதரர் தனுஷ் ரெட்ட தல படத்துக்காகச் சிறப்பான பாடலை பாடியுள்ளார். அவரின் குரலில் மெய்சிலிர்க்கவைக்கும் இந்த பாடல் அனைவருக்கும் பிடிக்கும், இந்த பாடலை பாடியதற்கு மிக்க நன்றி சகோதரரே” என்று நடிகர் தனுஷிற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் ,நடிகர் அருண் விஜய் நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த பதிவானது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ரெட்ட தல திரைப்படம் :

இயக்குநர் கிறிஸ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தை, BTG யுனிவர்சல் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் அருண் விஜய்க்கு இணையாக நடிகை சித்தி இட்னானி நடித்து வருகிறார். இவர்களுடன் நடிகர்கள் ஹரீஷ் பேரடி, தன்யா ரவிச்சந்திரன், நிதிஸ் நிர்மல், ஜான் விஜய் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த 2025 ஆண்டின் இறுதிக்குள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. நடிகர் அருண் விஜய்யின் 36வது திரைப்படமான இப்படத்திற்கு, இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்து வருகிறார். இவரின் இசையமைப்பில்தான் நடிகர் தனுஷ் இப்படத்திற்காக புதிய பாடல் ஒன்றைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.