சினிமாவில் 15 ஆண்டுகள் நிறைவு செய்த அதர்வாவின் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்ஸ் எத்தனை லட்சம் தெரியுமா?
Actor Atharvaa Murali: நடிகர் அதர்வா முரளி தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. வாரிசு நடிகராக சினிமாவில் அறிமுகம் ஆன இவர் தற்போது பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மறைந்த நடிகர் முரளியின் மகன் தான் நடிகர் அதர்வா முரளி (Actor Atharvaa Murali). இவர் பாணா காத்தாடி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகும் போது இதயம் முரளியின் மகன் என்று ரசிகர்கள் ஆரத் தழுவிக்கொண்டனர். மேலும் அதர்வா அறிமுகம் ஆன படத்தில் நடிகர் முரளியும் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் தனது மகன் அறிமுகம் ஆனதைப் பார்த்த நடிகர் முரளி அவர் வெற்றிப்படங்களை கொடுக்கும் போது இல்லை. உடல் நலக் குறைவால் மறைந்துவிட்டார். தனது தந்தையின் பெயரால் சினிமாவில் நடிகர் அதர்வா அறிமுகம் ஆகி இருந்தாலும் அவர் தனது கடின உழைப்பின் காரணமாக தொடர்ந்து படங்களில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, சண்டிவீரன், ஈட்டி, ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், இமைக்கா நொடிகள், பூமராங், 100, குருதி ஆட்டம், பட்டத்து அரசன் உட்பட இறுதியாக வெளியான டிஎன்ஏ வரை தொடர்ந்து பலப் படங்கள் அதர்வா நடிப்பில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் குறிப்பாக இறுதியாக நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான டிஎன்ஏ படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




அதர்வாவின் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்ஸ் எத்தனை லட்சம்?
இந்த நிலையில் நடிகர் அதர்வா சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை தங்களது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் தொடர்ந்து தங்களது ரசிகர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்க வேண்டும் என்பதற்காகவே பிரபலங்களும் நடிகர்களும் தங்களுக்கு என சமூக வலைதளப் பக்கத்தை ஆரம்பித்து அதில் புகைப்படங்களும், அவர்கள் நடிக்கும் படங்களின் அப்டேட்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் அதர்வா தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிடுவது மட்டும் இன்றி தனது படங்களின் அப்டேட்களையும் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் அதர்வாவிற்கு இன்ஸ்டாகிராமில் தற்போது 21 லட்சம் ஃபாலோவர்ஸ்களை கொண்டுள்ளார். இவர்கள் அனைவரும் தொடர்ந்து அதர்வாவின் போஸ்டுகளுக்கு ரியாக் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… நடிகர்கள் சூர்யா – ஜோதிகா குழந்தைகளுக்கு பிடித்த நடிகர் இவரா?
நடிகர் அதர்வாவின் கியூட் இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
Also Read… 3 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர் ஹிட் படமான சீதா ராமம் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?