மதராஸி படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்
Madharasi Movie: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அடுத்ததாக ரசிகரக்ள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் மதராஸி. இந்தப் படத்தின் பணிகண் இரண்டு ஆண்டுகளாக நடைப்பெற்று தற்போது வெளியீட்டு தேதியை உறுதி செய்துள்ளது. இந்த நிலையில் இன்று படத்தில் இருந்து புதிய போஸ்டரை ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் (Director AR Murugadoss) முன்னதாக இந்தியில் சிக்கந்தர் படத்தை எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் சல்மான் கான் நாயகனாக நடித்து இருந்தார். நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து இருந்தார். கடந்த ரம்ஜான் பண்டிகைக்கு வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்தப் படத்தின் பணிகளில் இருக்கும் போதே இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனை (Actor Sivakarthikeyan) வைத்து படம் இயக்குவது குறித்து அறிவிப்பை வெளியிட்டனர். இந்த அறிவிப்பு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பிறந்த நாள் அன்று அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் பணிகளிலும் சிக்கந்தர் படத்தின் பணிகளிலும் மாறி மாறி பணியாற்றி வந்தார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.
சிக்கந்தர் படத்தின் ரிலீஸிற்கு பிறகு முழுவதுமாக மதராஸி படத்தில் கவனம் செலுத்தி தற்போது படத்தின் ரிலீஸ் பணிகளில் பிசியாக உள்ளது படக்குழு. மேலும் படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.




மதராஸி படத்தின் புதிய் போஸ்டர் இதோ:
இந்த நிலையில் படம் வெளியாக இன்னும் 30 நாட்களே உள்ள நிலையில் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் உற்சாகமான நேருக்கு நேர் போட்டி தொடங்க இன்னும் 30 நாட்கள் உள்ளன என்றும் பதிவிட்டு இருந்தார். இந்தப் பதிவு தற்போது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.
மேலும் இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க நடிகை ருக்மிணி வசந்த் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து வித்யுத் ஜமால், விக்ராந்த், பிஜு மேனன் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து முதல் சிங்கிள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Also Read… கனிமா பாட்டுக்கு டான்ஸ் ஆடுனது இவ்வளவு வைரலாகும் நான் நினைக்கல – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
30 days to go for the exhilarating faceoff to begin 🔥#Madharaasi from September 5th in theatres worldwide!#DilMadharaasi#MadharaasiFromSep5@SriLakshmiMovie @Siva_Kartikeyan @anirudhofficial @VidyutJammwal #BijuMenon @rukminitweets @actorshabeer @vikranth_offl @SudeepElamon pic.twitter.com/0cYARQJ4Fm
— A.R.Murugadoss (@ARMurugadoss) August 6, 2025
Also Read… கருப்பு படத்தில் என் கதாப்பாத்திரம் இப்படிதான் இருக்கும் – நடிகை சுவாசிகா ஓபன் டாக்!