15 வருடங்களை நிறைவு செய்த பாணா காத்தாடி படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
Baana Kaathadi: நடிகர் அதர்வா நாயகனாகவும் நடிகை சமந்தா ரூத் பிரபு நாயகியாகவும் நடித்தப் படம் பாணா காத்தாடி. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி 15 வருடங்களை கடந்துள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

இயக்குநர் பத்ரி வெங்கடேஷன் (Director Badri Venkatesh) எழுதி இயக்கிய படம் பாணா காத்தாடி. கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் தற்போது 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்தப் படத்தில் நடிகர் அதர்வா முரளி (Actor Atharvaa Murali) நாயகனாக நடித்து இருந்தார். நடிகர் முரளியின் மூத்த மகனான இவர் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆன படம் இது என்பது குரிப்பிடத்தக்கது. அதே போல நடிகை சமந்தா ரூத் பிரபு நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பிரசன்னா, கருணாஸ், மௌனிகா, ராஜேந்திரன், மனோபாலா, டி.பி.கஜேந்திரன், உதயராஜ், அலெக்ஸ், இமான் அண்ணாச்சி, முரளி (சிறப்புத் தோற்றம்), டெபி தத்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர்.
இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்து இருந்த நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




பாணா காத்தாடி படத்தின் கதை என்ன?
பள்ளியிலேயே பல முறை பெயில் ஆகி கல்லூரி படிக்கும் வயதிலும் பள்ளிக்கு சென்று கொண்டிருப்பார் ரமேஷ் (அதர்வா). ஒரு நாள் எதார்த்தமாக நாயகி பிரியாவை (சமந்தா ரூத் பிரபு) பஸ் ஸ்டாண்டில் வைத்துப் பார்ப்பார் ரமேஷ். இவர்களுக்கு இடையே முதல் சந்திப்பே மோதலில் தான் ஆரம்பிக்கும். பிரியா ஃபேஷன் டெக்னாலஜி படித்துக் கொண்டிருப்பார். கல்லூரியில் அவர் கொடுக்க வேண்டிய புராஜெக்ட் ஃபைல்ஸ் இருக்கும் பெண்ட்ரைவ் ஒன்று எதிர்பாராத விதமாக ரமேஷின் சட்டைப் பாக்கெட்டில் விழுந்துவிடும்.
அதனைத் தொடர்ந்து கல்லூரிக்கு சென்று பிரியா பார்க்கும் போது அவரிடம் அந்த பெண்ட்ரைவ் இருக்காது. 6 மாதமாக புராஜெக்ட்டுகாக உழைத்த உழைப்பு அதில் இருக்கிறது. அந்த பெண்ட்ரைவை காணவில்லை என்று தனது ஆசிரியரிடம் அவகாசம் கேட்டு இருப்பார். இப்படி இருக்கும் சூழலில் ரமேஷ் தெருவில் தனது நண்பர்களுடன் இருக்கும் போது பிரியாவைப் பார்க்கிறார். அப்போது அவரை தனது நண்பர்களுடன் இணைந்து கிண்டலடிக்கவும் செய்கிறார்.
Also Read… திருமணம் குறித்து யோசிச்சாலே பயமா இருக்கு – நடிகை ஸ்ருதி ஹாசன்!
இதனால் கடுப்பான பிரியா ரமேஷை கண்ணத்தில் பளார் என்று அறைந்துவிடுகிறார். பெண்ட்ரைவ் காணாமல் போனதற்கும் நீதான் காரணம் என்றும் கூறுகிறார். அதனைத் தொடர்ந்து ரமேஷின் அம்மா துணி துவைக்கும் போது அவனது சட்டைப் பாக்கெட்டில் இருக்கும் பெண்ட்ரைவை எடுத்துக் காட்ட இதனால் தான் பிரியா தன்னை அடித்தார் என்பதை உணர்கிறார் ரமேஷ்.
அதனைத் தொடர்ந்து பெண்ட்ரைவை பிரியாவிடம் கொடுத்தப் பிறகு இருவரும் நண்பர்களாக நெருக்கம் ஆகின்றனர். அந்த நட்பு காதலாக மாற அதனைத் தொடர்ந்து என்ன நடந்தது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கின்றது.
அதர்வா முரளியின் சமீபத்திய இன்ஸ்டா பதிவு:
View this post on Instagram
Also Read… தேசிய விருதிற்கு பிறகு பொறுப்பு அதிகரித்துள்ளது – இயக்குநர் ராம்குமார்