நடிகையாவதற்கு முன்பு அந்த நடிகரோட நடிக்க அவ்வளவு ஆசைப்பட்டேன் – ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்
Actress Shruti Haasan: நடிகை ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் யார் என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். மேலும் அந்த நடிகருடன் தான் இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும் அது நடந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலக நாயகன் கமல் ஹாசனின் (Ulaga Nayagan Kamal Haasan) மூத்த மகளாக தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார் ஸ்ருதி ஹாசன் (Actress Shruti Haasan). முதலில் பாடகியாக அறிமுகம் ஆன இவர் பிறகு நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனர். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமா மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் இவர் இறுதியாக நடித்தது நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான லாபம். அதனைத் தொடர்ந்து தமிழ் மொழியில் நடிக்காமல் இருந்த இவர் தற்போது கூலி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். இது இவரது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கூலி படத்திற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் படத்தில் நடித்த நடிகர்கள் தொடர்ந்து தங்களது அனுபவங்களை பேட்டிகளில் தெரிவித்து வருகின்றனர். அதே போல நடிகை ஸ்ருதி ஹாசனின் பேட்டியும் ரசிகர்களிடையே தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.




எனக்கு ரொம்ப பிடித்த நடிகர் சூர்யா தான்:
அந்த வகையில் நடிகை ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் சூர்யா என்று தெரிவித்து இருந்தார். மேலும் சினிமாவில் நடிகையாக வருவதற்கு முன்பு தனது நண்பர்களுடன் பேசுகையில் நான் சினிமாவில் நடிகையாக ஆனால் ஒரு படத்திலாவது நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பேன்.
ஆனால் முதல் படத்திலேயே அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை இந்த யுனிவர்ஸ் எனக்கு வழங்கியது. அது மிகவும் மகிழ்ச்சியளித்தது என்றும் நடிகை ஸ்ருதி ஹாசன் அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் பேசிய இந்த வீடியோ தற்போது சூர்யா ரசிகர்களிடையே வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read… தேசிய விருதுகளை குவித்த பார்க்கிங் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
இணையத்தில் வைரலாகும் நடிகை ஸ்ருதி ஹாசனின் பேச்சு:
I’m a huge fan of @Suriya_offl sir. I used to say that if I ever acted in a Tamil film, I’d love to pair up with him and it happened! – @shrutihaasan ♥️ pic.twitter.com/lFu6bFgFJe
— All India Suriya Fans Club (@Suriya_AISFC) August 6, 2025
Also Read… 3 BHK முதல் பறந்து போ வரை… ஆகஸ்ட் மாதம் ஓடிடியில் வெளியாகும் தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ!