அதிரடி காட்சிகளுடன் வெளியானது அனுஷ்கா ஷெட்டியின் காட்டி படத்தின் ட்ரெய்லர்
Ghaati Movie Trailer: நடிகை அனுஷ்கா ஷெட்டி மற்றும் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் காட்டி. இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பையும் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விக்ரம் பிரபு (Actor Vikram Prabhu) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் லவ் மேரேஜ். 33 வயதான இளைஞருக்கு திருமணத்திற்காக பெண் தேடும் கதையை மையமாக வைத்து இந்தப் படம் வெளியாகி இருந்தது. காமெடி செண்டிமெண்டை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் காட்டி. தெலுங்கு சினிமாவில் உருவாகியுள்ள இந்த்ப் படத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டி (Actress Anushka Shetty) நாயகியாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ளார். இதில் படம் நாயகியை மையமாக வைத்து உருவாகியுள்ளது என்பது படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும் போதே தெரிகிறது.
மேலும் படத்தின் வெளியீட்டு தேதி முன்னதாக இரண்டு முறை அறிவிக்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் படம் வெளியாகவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது படத்தின் ட்ரெய்லரை இன்று 06-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த ட்ரெய்லரில் படம் வருகின்ர செப்டம்பர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாவதை உறுதி செய்துள்ளது.




இணையத்தில் கவனம் பெறும் காட்டி படம் ட்ரெய்லர்:
ஆக்ஷன் க்ரைம் ட்ராமாவாக உருவாகி உள்ள இந்த காட்டி படத்தை இயக்குநர் க்ரிஷ் ஜாகர்லமுடி இயக்கியுள்ளார். மேலும் நடிகர்கள் சைதன்யா ராவ் மடடி, ரம்யா கிருஷ்ணன், ஜெகபதி பாபு, ஜான் விஜய், ரவீந்திர ராகவ் ருத்ரா முல்புரு, தேவிகா பிரியதர்ஷினி, விஜய், VTV கணேஷ், லாரிசா போனேசி, ஜவாலா கோடி என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும் போது ஒருக் குழுவிற்கு நடிகை அனுஷ்கா ஷெட்டி தலைவியாக இருப்பது போல தெரிகிறது. இந்த சூழலில் அந்த குழுவிற்கு அதிகாரம் படைத்த நபர்களால் பிரச்னை ஏற்படும் போது அதனை அனுஷ்கா ஷெட்டியும் அவரது கணவருமான விக்ரம் பிரபு இணைந்து காப்பாற்றுவது போல தெரிகிறது. மேலும் படம் வெளியான பிறகே எந்த மாதிரியான கதை என்பதை தெரிந்துகொள்ள முடியும்.
Also Read… பர்த்டே பேபி மாளவிகா மோகனனின் இன்ஸ்டா ஃபாலோவர்ஸ் எத்தனை லட்சங்கள் தெரியுமா?
நடிகை அனுஷ்கா ஷெட்டி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
And here it is 🧿😍🙏🏻#GhaatiTrailer out now!
▶️ https://t.co/IupCnnowSq#GHAATI GRAND RELEASE WORLDWIDE ON SEPTEMBER 5th, 2025🧿😍@MsAnushkaShetty & @iamVikramPrabhu💪😍
🎥 Directed by @DirKrish😍
🏢 produced by 😍@UV_Creations & @FirstFrame_Ent
🎶 Music by @NagavelliV😍
🎼… pic.twitter.com/DSLswZ1YIo— Anushka Shetty (@MsAnushkaShetty) August 6, 2025
Also Read… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அந்தப் படம் மிகவும் பிடிக்கும் – நடிகை ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்