Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கூலி படத்தில் நடிக்கிறேன்னு தெரிஞ்சதும் ட்விட்டர்ல எல்லாம் கேட்ட கேள்வி இதுதான் – ஸ்ருதி ஹாசன் கலகல பேச்சு!

Actress Shruti Haasan: கோலிவுட் சினிமா மட்டும் இன்றி உலக அளவில் பலரும் தற்போது எதிர்பார்த்து காத்திருக்கும் படம் கூலி. இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தற்போது விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கூலி படத்தில் நடிக்கிறேன்னு தெரிஞ்சதும் ட்விட்டர்ல எல்லாம் கேட்ட கேள்வி இதுதான் – ஸ்ருதி ஹாசன் கலகல பேச்சு!
ஸ்ருதி ஹாசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Aug 2025 20:24 PM

நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகை ஸ்ருதி ஹாசனின் (Actress Shruti Haasan) நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் கூலி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து உள்ள இந்தப் படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். பான் இந்திய மொழிகளில் வெளியாக உள்ள இந்த கூலி படத்தில் பான் இந்திய நட்சத்திரங்களான ஷௌபின் ஷாகிர், உபேந்திரா, நாகர்ஜுனா மற்றும் அமீர் கான் உடன் இணைந்து நடிகர்கள் சத்யராஜ், ரசிதா ராம், ரெபா மோனிகா ஜான், ஜூனியர் எம்ஜிஆர், கண்ணா ரவி, மோனிஷா பிளெஸ்ஸி, காளி வெங்கட், ரிஷிகாந்த், தமிழ் மற்றும் சார்லி நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் சிறப்பு நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து ரசிகர்களிடையே அதிகரித்து வருகின்றது. மேலும் படம் வருகின்ற 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் தொடர்ந்து புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கூலி படத்தில் என் கதாப்பாத்திரம் செத்துடுமானு கேட்டாங்க?

அந்த வகையில் இந்தப் படத்தில் நடித்த நடிகை ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தான் கூலி படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து ட்விட்டரில் அனைவரும் கேட்ட கேள்வி என்று சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் கூலி படத்தில் ப்ரீத்தி என்ற கதாப்பாத்திரத்தில் நான் நடிப்பதாக போஸ்டர் வெளியான அடுத்த நாளில் இருந்து ட்விட்டரில் அனைவரும் அப்போ உன் தலையும் போச்சா என்று கேட்டார்கள் என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

அதற்கு காரணம் முன்னதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படங்களில் பெண்களின் கதாப்பாத்திரங்கள் மிகவும் கொடுமையான முறையில் கொலை செய்யப்படுவது போல காட்டப்பட்டு இருக்கும். அதன் காரணமாகவே ரசிகர்கள் இப்படி ஸ்ருதியிடம் கேட்டுள்ளனர். ஆனால் அந்தப் பேட்டியில் ஸ்ருதி ஹாசன் கூறியதாவது இந்தப் படத்தில் அப்படி இருக்காது என்று தெரிவித்து இருந்தார்.

Also Read… கூலி படத்தில் ரஜினிகாந்த் சாரின் பேட்ஜ் நம்பராக 1421 கொடுக்க இதுதான் காரணம் – இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

இணையத்தில் வைரலாகும் ஸ்ருதி ஹாசனின் பேச்சு:

Also Read… 3 BHK முதல் பறந்து போ வரை… ஆகஸ்ட் மாதம் ஓடிடியில் வெளியாகும் தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ!