அகாண்டா 2 படத்தின் டப்பிங் பணியை முடித்த நடிகர் பாலகிருஷ்ணா
Actor Nandamuri Balakrishna: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவரை ரசிகர்கள் அன்புடன் பாலையா எனவும் அழைப்பார்கள். இவருக்கு தெலுங்கு சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவிலும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா (Actor Nandamuri Balakrishna). இவர் 50 ஆண்டுகளாக சினிமாவில் இருந்தாலும் தற்போது உள்ள இளம் நடிகர்களுக்கு போட்டியாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகராக இருக்கும் நந்தமுரி பாலகிருஷ்ணாவிற்கு தெலுங்கு சினிமாவில் மட்டும் இன்றி தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் என தென்னிந்திய மொழிகளிலும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம் என்றே சொல்லலாம். இவரது நடிப்பை அதிகமாக ட்ரோல் செய்தாலும் இவரது ரசிகர்கள் இவரைத் தொடர்ந்து கொண்டாடிக்கொண்டே இருக்கின்றனர். இவரது நடிப்பில் வெளியாகும் பாடல்களை தொடர்ந்து ரசிகரக்ள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து ரீல்ஸ்களாக ரீ கிரியேட் செய்தும் வருகின்றது. அது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது பாலகிருஷ்ணா அரசியல் மற்றும் சினிமா என்று இரண்டிலும் பிசியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் பாலகிருஷ்ணா தற்போது அகாண்டா 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கின்றனர்.




அகாண்டா 2 படத்தின் டப்பிங் பணியை முடித்த பாலகிருஷ்ணா:
நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் அகாண்டா. இந்தப் படத்திற்கு இயக்குநர் போயபதி ஸ்ரீனு எழுதி இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் பாலகிருஷ்ணா உடன் இணைந்து நடிகர்கள் பிரக்யா ஜெய்ஸ்வால், ஜெகபதி பாபு மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர்.
முதல் பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பணிகளில் நடிகர் பாலகிருஷ்ணா பிசியாக இருக்கிறார். இந்த நிலையில் படம் தசரா பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் படத்தின் டப்பிங் பணியை நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா முடித்துவிட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இணையத்தில் கவனம் பெறும் அகாண்டா 2 படத்தின் பதிவு:
GOD OF MASSES’ #NandamuriBalakrishna completes dubbing for #Akhanda2
This duo is set to deliver a 4X BLOCKBUSTER. The Thaandavam is going to be massive, beyond your imagination The post-production is in full swing. All set for a grand release onSeptember 25th
Akhanda2Thaandavam pic.twitter.com/BQ7LKShgeq— Akhanda2Official (@Akhanda2Officia) August 8, 2025
Also Read… எனக்கு முகப்பருக்கள் வந்தால் இதுதான் செய்வேன் – நடிகை தமன்னா பாட்டியா சொன்ன விசயம்!