Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Jailer 2: ரஜினி படத்தில் பாலகிருஷ்ணா.. கோடிக்கணக்கில் சம்பளம் கேட்டாரா?

Nandamuri Balakrishna In Jailer 2 : டோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவர் தெலுங்கு சினிமாவில் பேமஸ் நடிகராகப் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் ரஜினியின் ஜெயிலர் 2வில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிவந்த நிலையில், அதில் நடிப்பதற்குக் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Jailer 2: ரஜினி படத்தில் பாலகிருஷ்ணா.. கோடிக்கணக்கில் சம்பளம் கேட்டாரா?
ரஜினிகாந்த் மற்றும் நந்தமுரி பாலகிருஷ்ணா Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 10 May 2025 07:00 AM

நடிகர் ரஜினிகாந்த்தின் (Rajinikanth) நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் ஜெயிலர் 2 (Jailer 2). இந்த படத்தை  இயக்குநர்  நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்கி வருகிறார். இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டு வெளியான ஜெயிலர் 1 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மிகவும் பிரமாண்டமாக உருவாகிவருகிறது. இந்த பாகம் 2ல் நடிகர் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் (Ramya Krishnan) நடித்து வருகிறார். இவர் ஜெயிலர் 1 படத்திலும் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார். தற்போது மிகவும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில், மாறுபட்ட கதைக்களத்தில் இந்த படமானது உருவாகி வருகிறது. இந்த படத்தைப் பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் பான் இந்திய நடிகர்கள் சில நடிக்கவிருப்பதாகக் கூறப்பட்டு வந்தது. அதில் ஒருவர்தான் டோலிவுட் பிரபல நடிகர் பாலையா (நந்தமுரி பாலகிருஷ்ணா). இவர் நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் 2 படத்தில் முக்கிய தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், சமீபத்தில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

இந்நிலையில் இந்தப் படத்தில் நடிப்பதற்காக நடிகர் பாலையா சுமார் ரூ. 50 கோடியைச் சம்பளமாகக் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 20 நாட்கள் படப்பிடிப்பிற்கு சுமார் ரூ. 50 கோடியைச் சம்பளமாகக் கேட்டுள்ளார். இதற்குப் படக்குழு ஒத்துக்கொண்டதாகவும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலானது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

ஜெயிலர் 2 படக்குழு வெளியிட்ட அறிவிப்பு :

நடிகர் ரஜினியின் இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது. பாகம் 1ல் ஏற்கனவே நடிகர் மோகன் லால் நடித்திருந்த நிலையில், பாகம் 2லும் அவர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, ஃபகத் பாசில் , யோகி பாபு, சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

விறுவிறுப்பாக தயாராகும் கூலி படம்

இந்த படத்தின் படத்திற்கு முன் நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் இந்த படமானது உருவாகியுள்ளது. இதில் நடிகர்கள் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திர ராவ், நாகார்ஜுனா மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

கூலி படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படமானது பிரம்மாண்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் நிலையில், நிச்சயம் ரூ. 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய இந்தியா.. வீடியோ வெளியிட்ட ராணுவம்
ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய இந்தியா.. வீடியோ வெளியிட்ட ராணுவம்...
மீண்டும் அதே கூட்டணி.. அஜித்தின் அடுத்தப்பட இயக்குநர்!
மீண்டும் அதே கூட்டணி.. அஜித்தின் அடுத்தப்பட இயக்குநர்!...
”மனித வெடிகுண்டாக மாற தயார்" அமைச்சர் சொன்ன பகீர் தகவல்
”மனித வெடிகுண்டாக மாற தயார்
ரோகித்தை தொடர்ந்து ஓய்வை அறிவிக்கும் விராட் கோலி?
ரோகித்தை தொடர்ந்து ஓய்வை அறிவிக்கும் விராட் கோலி?...
அரசு, தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் நிறைந்த உணவியல் கல்வி..!
அரசு, தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் நிறைந்த உணவியல் கல்வி..!...
இந்தியா பாகிஸ்தான் மோதல்.. கொதித்தெழுந்த ஜி7 நாடுகள்
இந்தியா பாகிஸ்தான் மோதல்.. கொதித்தெழுந்த ஜி7 நாடுகள்...
கள்ளழகர் புறப்பாட்டை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு
கள்ளழகர் புறப்பாட்டை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு...
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள்?- பேச்சுவார்த்தை தீவிரம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள்?- பேச்சுவார்த்தை தீவிரம்...
சித்ரா பௌர்ணமி.. தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில் அறிவிப்பு
சித்ரா பௌர்ணமி.. தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில் அறிவிப்பு...
பெற்ற தாய் செய்த கொடூரம்... 3 வயது குழந்தை கழுத்து நெரித்து கொலை
பெற்ற தாய் செய்த கொடூரம்... 3 வயது குழந்தை கழுத்து நெரித்து கொலை...
தமிழ்நாட்டில் எரிபொருள் பற்றாக்குறையா? இந்தியன் ஆயில் சொன்ன தகவல்
தமிழ்நாட்டில் எரிபொருள் பற்றாக்குறையா? இந்தியன் ஆயில் சொன்ன தகவல்...