எஸ்.எஸ்.ராஜமௌலி மாதிரி ஒரு நடிகர 3 வருஷம் நான் உக்கார வைக்க மாட்டேன் – ஓபனாக பேசிய லோகேஷ் கனகராஜ்!
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படத்தினை இயக்கி முடித்துள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகர்களை இயக்குநர் ராஜமௌலி போல மூன்று ஆண்டுகளுக்கு ஒரே படத்தில் நடிக்க வைக்க உக்காரா வைத்திருக்க மாட்டேன் என்று கூறியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) நடிப்பில் தற்போது உருவாகியுள்ள கூலி படம் ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகின்றது. இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj) சமீபத்திய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அளித்தப் பேட்டியில் அவரது சினிமாட்டிக் யூனிவர்ஸ் குறித்தும் அவரது அடுத்தடுத்தப் படங்கள் குறித்தும் அவர் வெளிப்படையாக பேசியதும், கூலி படத்திற்கு பிறகு அவர் கைதி 2 படத்தின் பணிகளையும் அதனை தொடர்ந்து விக்ரம் 2 மற்றும் லியோ 2 படங்கள் வரிசையில் உள்ளது என்று தெரிவித்தார். அதன் பிறகு நடிகர் சூர்யாவின் நடிப்பில் ரோலக்ஸ் படத்தின் பணிகளை தொடங்க வாய்ப்பு உள்ளது என்றும் அந்தப் பேட்டியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குநர் ராஜமௌலி குறித்து பேசியது தற்போது வைரலாகி வருகின்றது. அதில் அவர் பேசியதாவது, “நான் இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் போன்ற படங்களை இயக்குவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
அவ்வாறு அவர் கூறியதற்கு காரணம் அந்த மாதிரியான படங்களில் நடிக்கும் நடிகர்கள் மூன்று வருடங்கள் ஒரே படத்திற்கா காத்திருக்க வேண்டும். ஆனால், நான் எனது படங்களை 6 முதல் 8 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று நினைப்பேன். அப்படித்தான் இதுவரை படங்களை இயக்கி வருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்த் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இதன் காரணமாக எனது படங்களில் நடிக்கும் நடிகர்கள் என்னுடைய படத்தில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என்றும், படங்களில் நடிகர்களின் உடைகளில் நான் தலையிடக் கூடாது என்று நினைப்பேன் என்றும் அந்தப் பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Arangam Adhirattume, Whistle Parakkattume!🔥💥 #CoolieIn100Days ⏳#Coolie worldwide from August 14th 😎@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja @anbariv @girishganges @philoedit @ArtSathees… pic.twitter.com/M8tqGkNIrJ
— Sun Pictures (@sunpictures) May 6, 2025
தற்பொது இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கூலி படம் குறித்து பார்க்கும் போது இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்தைத் தவிர நடிகர்கள் ஸ்ருதி ஹாசன், நாகார்ஜுனா, சௌபின் ஷாகிர், உபேந்திரா ராவ் மற்றும் சத்யராஜ் போன்ற பிரபல நடிகர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பாலிவுட் நடிகர் ஆமிர் கானும் கூலி படத்தின் ஒரு சிறிய வேடத்தில் நடித்து உள்ளார் என்றும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ள நிலையில் படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.