மகன் சஞ்சய் குறித்து சுவாரஸ்யமாக பேசிய விஜய்… என்ன சொல்லி இருக்கார் தெரியுமா?
Actor Thalapathy Vijay: தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இவரது படங்கள் மட்டும் இன்றி இவரது சொந்த வாழ்க்கை குறித்தும் ரசிகர்கள் தெரிந்துகொள்ள விரும்புவதும் வழக்கம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் (Actor Vijay). இவர் தற்போது தனது 69-வது படமான ஜன நாயகனில் நடித்து முடித்துள்ளார். நடிகர் விஜய் தொடர்ந்து தனக்கு ஆதரவு கொடுத்த தமிழக மக்களுக்கு எதாவது நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த நிலையில் தொடர்ந்து கட்சிப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதால் சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகுவதாகவும் அவர் தெரிவித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நடிகர் விஜய் தற்போது நடித்துள்ள ஜன நாயகன் தான அவரது நடிப்பில் வெளியாக உள்ள கடைசிப் படம் என்பதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் படம் குறித்த அப்டேட்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த ஜன நாயகன் படம் வருகின்ற ஜனவரி மாதம் 9-ம் தேதி 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் காவல்துறை அதிகாரியாக நடித்து இருப்பது படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியான போது தெரிந்தது.




மகன் சஞ்சய் குறித்து பேசிய விஜய்:
இந்த நிலையில் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சை தற்போது இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகியுள்ளார். நடிகர் சந்தீப் கிஷனை வைத்து படத்தை இயக்கி வருகிறார். இதனை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் விஜய் முன்னதாக தனது மகன் குறித்துப் பேசியது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
அதில் பீஸ்ட் படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக நடிகர் விஜய் மற்றும் நெல்சன் இருவரும் ஒரு கலந்துறையாடலை நிகழ்த்தி இருந்தனர். அதில் நடிகர் விஜய் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு சைக்கிலில் சென்று ஓட்டு போட்டார். அந்த வீடியோ மிகவும் வைரலானது.
அந்த வீடியோ குறித்து நெல்சன் கேட்க அதுகுறித்து விஜய் பேசியபோது அப்போ ஒரு விசயம் நடந்தது. என் பையன்கிட்ட ஓட்டு போட்டுவிட்டு வந்து போன் பேசும் போது எல்லாம் சொன்னா அவன் அதெல்லாம் இருக்கட்டும் என் சைக்கிலுக்கு எதும் ஆகலல என்று கேட்டதாக கலகப்பாக பேசினார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.
நடிகர் விஜய் சமீபத்தில் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#JanaNayagan pic.twitter.com/Sv5q81Q3fl
— Vijay (@actorvijay) June 22, 2025
Also Read… பராசக்தி படத்தில் நான் தான் வில்லனாக நடிக்க வேண்டியது – லோகேஷ் கனகராஜ் சொன்ன சம்பவம்