விக்ரம் பிரபுவின் சிறை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்
Sirai Movie First Look Poster: நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் சிறை. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடிகர் விக்ரம் பிரபு இந்தப் படத்தில் நடித்துள்ளது போஸ்டரைப் பார்க்கையில் தெரிகிறது.

நடிகர் விக்ரம் பிரபு (Actor Vikram Prabhu) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் லவ் மேரேஜ். 33 வயதான இளைஞன் திருமணத்திற்காக ஊர் முழுவதும் பெண் தேடி அவருக்கு பெண் அமையவில்லை. இறுதியில் எப்படி அவருக்கு திருமணம் நடந்தது என்பதை மையமாக வைத்து காமெடிப் படமாக உருவாகி இருந்தது லவ் மேரேஜ். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தெலுங்கு மொழியில் நடிகர் விக்ரம் பிரபு காட்டி என்ற படத்தில் நடித்துள்ளார். நடிகை அனுஷ்கா ஷெட்டி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள அந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. மேலும் அந்த ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் கவனத்தையும் பெற்றது. இந்த நிலையில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் அடுத்ததாக தமிழில் உருவாகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.




விக்ரம் பிரபுவின் சிறை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்:
நடிகர் விக்ரம் பிரபு தற்போது நடிக்க கமிட்டாகியுள்ள படம் சிறை. இந்தப் படத்தை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி எழுதி இயக்க உள்ளார். இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகும் முதல் படம் ஆகும். இந்தப் படத்தில் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் அக்ஷய் குமார் நடிகராக அறிமுகம் ஆகியுள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை அனிஷ்மா அனில்குமார் நடிக்கிறார்.
இவர் மலையாளத்தில் நடிகர் நஸ்லேன் நடிப்பில் வெளியான ஐயம் காதலன் என்ற படத்தின் மூலம் பிரபலம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்து. மேலும் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகும் முதல் படம் இந்த சிறை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் பிரபு போலீஸாக நடித்துள்ளார்.
முன்னதாக விக்ரம் பிரபு போலீஸாக நடித்த டானாக்காரன் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த நிலையில் இந்தப் படமும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Glad to unveil the First Look of #Sirai 🤗
My hearty wishes to @lk_akshaykumar on his debut, @iamVikramPrabhu and the entire cast and crew all the very best🤗❤️
And Lalit sir a very Happy Birthday 🤗🤗@7screenstudio @Jagadishbliss pic.twitter.com/NmEYVCmfzh
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) August 9, 2025
Also Read… சினிமாவில் 15 ஆண்டுகள் நிறைவு செய்த அதர்வாவின் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்ஸ் எத்தனை லட்சம் தெரியுமா?