அனிருத் சினிமாவிற்கு வர நான் காரணம் இல்லை – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொன்ன விசயம்!
Aishwarya Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் தான் நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் தற்போது தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் வலம் வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் அனிருத் குறித்து ஒரு நேர்காணலில் பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமா ரசிகர்களிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளாக அறிமுகம் ஆனவர் ஐஸ்வர்யா (Aishwarya Rajinikanth). அதனைத் தொடர்ந்து கடந்த 2004-ம் ஆண்டு நடிகர் தனுஷை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சுமார் 20 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருந்து தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அறிவித்தனர். அதன்படி கடந்த 2024-ம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து கிடைத்தது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் அவர் அவர் பணிகளில் பிசியாக உள்ளனர். அவ்வபோது தங்களது குழந்தைகளின் பள்ளி நிகழ்வுகளில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஒன்றாக கலந்துகொள்ளும் வீடியோ இணையத்தில் வெளியாகி தொடர்ந்து வைரலாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாரின் மகளாவும், இயக்குநராகவும் வலம் வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அனிருத் சினிமாவிற்கு வந்தது குறித்து பேசியுள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.




அனிருத் குறித்து ஐஸ்வர்யா ரஜினி சொன்ன விசயம்:
அதன்படி தற்போது இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் அனிருத் சினிமாவிற்கு வர தான் காரணம் இல்லை என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்தின் தம்பி மகன் தான் இசையமைப்பாளர் அனிருத்.
அதன்படி மாமா மகனான அனிருத் சினிமாவிற்கு வர தான் காரணம் இல்லை என்றும் தனுஷ் தான் முழுக்க முழுக்க காரணம் என்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அதன்படி அனிருத்தை வெளிநாட்டிற்கு அனுப்பி படிக்க வைக்க வேண்டும் என்று அவரது பெற்றோர்கள் நினைத்ததாகவும் அப்போது தனுஷ் தான் அவர்களிடம் பேசி மியூசிக்கில் பெரிய ஆளா வருவார் என்னை நம்புங்க என்று கூறி அவரை இங்கையே இருக்க வைத்தார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அனிருத்திற்கு கீபோர்ட் வாங்கி கொடுத்ததும் தனுஷ் தான் 3 படத்தில் அனிருத்தை இசையமைப்பாளராக போடலாம் என்று என்னிடம் கூறியதும் தனுஷ் தான். அனிருத் அறிமுகம் ஆக தனுஷ் தான் காரணம் என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
Also Read… யூடியூபில் 10 மில்லியன் பார்வைகளை கடந்தது என்ன சுகம் பாடலின் லிரிக்கள் வீடியோ
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
View this post on Instagram
Also Read… 15 வருடங்களை நிறைவு செய்த பாணா காத்தாடி படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?