Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கார் ரேஸில் அஜித் குமாருடன் கைகோர்க்கும் நரேன் கார்த்திகேயன் – வெளியான அறிவிப்பு

Narain Joins Ajith Team : அஜித் குமார் ரேஸிங் என்ற நிறுவனத்தை துவங்கி, நடிகர் அஜித்குமார் கார் ரேஸ் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் அவருடன் இணைந்து இந்தியாவின் ஃபார்முலா ஒன் வீரர் நரேன் கார்த்திகேயன் வருகிற ஆசிய லே மேன்ஸ் போட்டிகளில் பங்கேற்கவிருக்கிறார்.

கார் ரேஸில் அஜித் குமாருடன் கைகோர்க்கும் நரேன் கார்த்திகேயன் – வெளியான அறிவிப்பு
அஜித் குமார் - நரேன் கார்த்திகேயன்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 06 Aug 2025 22:05 PM

இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் வரலாற்றில் முக்கிய தருணமாக இந்தியாவின் ஃபார்முலா ஒன் போட்டியாளரான நரேன் கார்த்திகேயன் (Narain Karthikeyan), பிரபல நடிகரும் கார் ரேஸ் வீரரான அஜித் குமாரின் (Ajith Kumar) அஜித் குமார் ரேஸிங் (Ajith Kumar Racing) அணியில் இணைந்துள்ளார். இது இந்தியாவின் கார் ரேஸ் வரலாற்றில் மிக முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது. மேலும் அஜித் குமாருடன் இணைந்து வரவிருக்கும் ஆசிய லே மேன்ஸ் (Asian Le Mans Series) தொடரில் பங்கேற்கவிருக்கிறார். இதற்கான அறிவிப்பை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த தகவல் அஜித் ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் கார் ரேஸ் ரசிகர்களிடையேயும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இது இந்திய ரேசிங் உலகத்திற்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கும் நிகழ்வாக மாறியுள்ளது.

அஜித் குமாருடன் கைகோர்க்கும் நரேன் கார்த்திகேயன்

இந்தியாவின் ஃபார்முலா ஒன் போட்டியாளரான நரேன் கார்த்திகேயன் நடிகர் அஜித்குமாரின் அஜித் குமார் ரேஸிங் நிறுவனத்துடன் இணைந்து கார் பந்தயங்களில் பங்கேற்கவிருக்கிறார். மேலும் வரவிருக்கும் ஆசிய லே மேன்ஸ் போட்டியில் அஜித்குமாருடன் இணைந்து பங்கேற்கவிருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, எனக்கு அஜித் குமாரை பல வருடங்களாக தெரியும். அவரை இப்போது தொழில்முறை ரேஸராக பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நான் அவருடன் ஏசியன் லே மேன்ஸ் தொடரில் பங்கேற்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : அஜித்துடன் ஏ.ஆர்.முருகதாஸ், சிறுத்தை சிவா, அனிருத்… – வைரலாகும் போட்டோ – பின்னணி என்ன?

நரேன் கார்த்திகேயன் இணைவது தொடர்பாக சுரேஷ் சந்திராவின் பதிவு

 

இதையும் படிக்க : சினிமாவில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித் குமார் – வைரலாகும் ஆதிக் ரவிச்சந்திரனின் எக்ஸ் தள பதிவு!

கார் ரேஸில் சாதிக்கும் அஜித் குமார்

அவரது படத்தின் தலைப்புக்கு ஏற்ப  ரேஸராக வேண்டும் என்ற தனது பல வருட கனவை விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் தற்போது நிறைவேற்றி வருகிறார் அஜித்குமார். சாதிக்க வயது தடையில்லை என்பதை மேலும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். தற்போது அஜித் குமார் ரேஸிங் என்ற அணியை உருவாக்கி அதில் பங்கேற்று வருகிறார்.  துபாயில் நடைபெற்ற தனது முதல் போட்டியிலேயே 3வது இடம் பிடித்து சாதனை படைத்து வருகிறார். வருகிற அக்டோபர், 2025 போட்டிகளில் பங்கேற்கவிருக்கிறார். அதன் பிறகே திரைப்படங்களில் நடிக்கவிருக்கிறார்.