Jana Nayagan vs The Raja Saab : ஜன நாயகனுடன் மோதுகிறதா பிரபாஸின் தி ராஜா சாப்?
Jana Nayagan vs The Raja Saab : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் பிரபாஸ். இவரின் நடிப்பில் அசத்தல் ஹாரர் மற்றும் நகைச்சுவை திரைப்படமாக உருவாகிவருவது தி ராஜா சாப். இப்படம் இந்த 2025, டிசம்பர் மாதத்தில் வெளியாகவிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி தள்ளிப்போகியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்துடன் மோதவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் பிரபாஸ் (Prabhas) தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக உருவாகிவருவது தி ராஜா சாப் (The Raja Saab). இந்த படத்தைப் பிரபல இயக்குநர் மாருதி (Maruthi) இயக்கிவருகிறார். இந்த படத்தில் பிரபாஸ் முன்னணி வேடத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக, மாளவிகா மோகனன் (Malavika Mohanan), நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் நடித்துவருகின்றனர். மேலும் இப்படத்தில் முக்கிய வில்லனாக நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது. அதில் இப்படமானது வரும் 2025, டிசம்பர் 5 ஆம் தேதியில் வெளியாகும் என் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், படத்தின் ஷூட்டிங் இன்னும் முழுமையாக நிறைவடையாத நிலையில், படமானது வரும் 2026ம் ஆண்டு வெளியாக உள்ளதாகத் தகவல்கள் பரவி வருகிறது. இப்படமானது வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) ஜன நாயகன் (Jana nayagan) படமும் 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகவுள்ள நிலையில், இந்த இரு படங்களுக்கும் இடையே பாக்ஸ் ஆபிஸ் மோதல் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இது குறித்து தி ராஜா சாப் தயாரிப்பாளர் டி. ஜி. விஸ்வ பிரசாத் விளக்கம் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க : சிங்கத்தின் ஆட்டம்.. சிலம்பரசன் – வெற்றிமாறன் படம் குறித்து அப்டேட்!
தி ராஜா சாப் திரைப்படத்தின் டீசர் பதிவு :
Hello Hello Hello…..
Presenting #TheRajaSaabTeaser to all of you with love ❤️https://t.co/JEaT049Us4#Prabhas #TheRajaSaab pic.twitter.com/wSNVYB8j0g
— The RajaSaab (@rajasaabmovie) June 16, 2025
தி ராஜா சாப் பட தயாரிப்பாளர் பேச்சு :
இது குறித்து அந்த படத்தின் தயாரிப்பாளர் டி.ஜி. விஷ்வ பிரசாத் பேசியுள்ளார். அவர், தெலுங்கு மக்கள் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு பிரபாஸின் தி ராஜா சாப் படத்தை வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி வெளியிடவேண்டும் என ஆசைப்படுவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 2025, அக்டோபர் மாதத்திற்குள் நிறைவடைந்துவிடும், அதன் பிறகு இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவலானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜன நாயகன் VS தி ராஜா சாப் :
தளபதி விஜய்யின் கடைசி படமாக உருவாகிவருவது ஜன நாயகன். இந்தப் படத்தில் விஜய்யுடன் முக்கிய வேடத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல் மற்றும் மமிதா பைஜூ போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இப்படத்தின் கேமியோ ரோலில் நடிகர் தனுஷ் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்க, கே.வி.என். ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் அனிருத் இசையமைத்து வருகிறார்.
இதையும் படிங்க : அவன் பெரு ஜடல்.. நானியின் ‘தி பாரடைஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 09ம் தேதியில் வெளியாகிறது. இந்நிலையில் அதே மாதத்தில் தெலுங்கு பண்டிகையான சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு, பிரபாஸின் தி ராஜா சாப் படமானது வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.