Silambarasan TR: சிங்கத்தின் ஆட்டம்.. சிலம்பரசன் – வெற்றிமாறன் படம் குறித்து அப்டேட்!
Vetrimaaran And Silambarasan Movie Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சிலம்பரசன். இவரின் நடிப்பில் தக் லைஃப் படமானது இறுதியாக வெளியானது. இந்த படத்தை அடுத்தாக இயக்குநர் வெற்றிமாறனுடன் புதிய படத்தில் இணைந்துள்ளார். இந்நிலையில், அந்த படத்தைப் பற்றி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்ட அப்டேட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

நடிகர் சிலம்பரசன் (Silambarasan) தனது சிறு வயது முதல், தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் 2 ஆண்டுகளுக்குப் பின் இவரின் நடிப்பில் வெளியான படம் தக் லைஃப் (Thug Life). இந்த படத்தில் சிலம்பரசன், நடிகர் கமல்ஹாசனுடன் (Kamal Haasan) இணைந்து நடித்திருந்தார். கடந்த 2025, ஜூன் 5ம் தேதியில் இப்படமானது உலகமெங்கும் வெளியானது. இந்த படமானது இவருக்குக் கலவையான விமர்சனங்களையே கொடுத்திருந்தது. அந்த வகையில் இந்த படத்தை அடுத்தாக, பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுடன் (Ramkumar Balakrishnan) , STR49 படத்தில் இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டதும் சில காரணங்களால் இப்படத்தின் ஷூட்டிங் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது சிலம்பரசன் இயக்குநர் வெற்றிமாறனின் (Vetrimaaran) இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ப்ரோமோ வீடியோ ஷூட்டிங் சமீபத்தில் நடைபெற்றிருந்தது. இந்நிலையில், தற்போது, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி புது தகவலைக் கொடுத்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு சிலம்பரசன் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : கூலி பட டிக்கெட் வாங்க முந்தியடித்த கேரள ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ!
வெற்றிமாறன் – சிம்பு படம் குறித்து சுரேஷ் காமாட்சி வெளியிட்ட எக்ஸ் பதிவு :
தொடங்கியது மற்றவர்களின் அலறலைத் தாண்டி தொடரும். சிங்கத்தின் ஆட்டம் விரைவில். @SilambarasanTR_ @theVcreations #VetriMaaran https://t.co/ct3cGan0SY
— sureshkamatchi (@sureshkamatchi) August 8, 2025
இந்த பதிவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “தொடங்கியது மற்றவர்களின் அலறலைத் தாண்டி தொடரும். சிங்கத்தின் ஆட்டம் விரைவில்” என சிலம்பரசன், வெற்றிமாறன் மற்றும் கலைபுலி எஸ். தாணு என அனைவரையும் டேக் செய்து பதிவிட்டுள்ளார். இத பதிவானது தற்போது சிலம்பரசன் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது. வெற்றிமாறன் மற்றும் சிலம்பரசன் கூட்டணியின் அறிவிப்பு வீடியோ விரைவில் வெளியாகவுள்ளதாகவும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்தக் கூட்டணி படத்தின் அறிவிப்பு வீடியோ இந்த 2025, ஆகஸ்ட் மாதத்தின் இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியான இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : அவன் பெரு ஜடல்.. நானியின் ‘தி பாரடைஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
சிலம்பரசன் மற்றும் வெற்றிமாறன் படம் :
இந்த கூட்டணி படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகவுள்ளதாம். தனுஷின் வட சென்னை படத்தின் கதையை தொடர்புப்படுத்தி இப்படம் உருவாகவுள்ளதாம். இயக்குநர் லோகேஷ் கனகராஜின் LCU படத் தொகுப்பு போல, வெற்றிமாறன் வடசென்னை படத்தைத் தொடர்புப்படுத்தி சிலம்பரசனின் புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் இந்த 2025, ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் சிவராஜ்குமார் மற்றும் நடிகர் மணிகண்டன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.