Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Ashwath Marimuthu : சிலம்பரசன் எனக்கு பிரஷர் கொடுக்கல.. இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து ஓபன் டாக்!

Ashwath Marimuthu About SIlambarasan STR51 Movie : தமிழ் சினிமாவில் சில படங்களை இயக்கி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அஷ்வத் மாரிமுத்து. இவர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட நிலையில், STR 51 படத்திற்காக சிலம்பரசன் செய்த விஷயங்கள் குறித்து ஓபனாக பேசியுள்ளார்.

Ashwath Marimuthu :  சிலம்பரசன் எனக்கு பிரஷர் கொடுக்கல.. இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து ஓபன் டாக்!
அஸ்வத் மாரிமுத்து மற்றும் சிம்பு
Barath Murugan
Barath Murugan | Published: 22 Jul 2025 20:51 PM

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து (Ashwath Marimuthu ) இயக்கத்தில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் டிராகன் (Dragon). இந்த திரைப்படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இரு கதாநாயகிகள் நடித்திருந்தனர். இந்த படமானது கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்து இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, சிலம்பரசனுடன் (Silambarasan) புதிய படத்தில் இணைவதாக அறிவித்திருந்தார். டிராகன் படத்தின் தொடர்ச்சியாக சிலம்பரசனின் STR51 படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். இந்த திரைப்படமானது பேண்டஸி திரை கதைகளுடன் உருவாக்கவுள்ளதாம். இப்படத்தின் ப்ரீ- ப்ரொடக்ஷன் (Pre-production) வேலைகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து கலந்துகொண்டார்.

அந்த நேர்காணலில் அவர் STR51 படத்திற்காக சிலம்பரசன் என்னை பிரஷர் செய்யவில்லை, அவர் ஜாலியாக என்னை ஸ்கிரிப்ட் வேலையைப் பார்க்கச் சொன்னதாக அவர் கூறியுள்ளார். அவர் பேசியதை பற்றி விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : குடும்பஸ்தன் படத்தில் முதலில் அந்த நடிகர்தான் நடிக்க வேண்டியது – நடிகர் மணிகண்டன் ஓபன் டாக்

சிலம்பரசனை பற்றி அஷ்வத் மாரிமுத்து பேசிய விஷயம் :

அந்த நேர்காணலில் பேசிய இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து, “STR51 திரைப்படத்தை உடனே பண்ணவேண்டும் என்று நாங்கள் வருத்திக்கொள்ளவில்லை. சொல்லப்போனால் எனது STR51 பட ஹீரோ சிலம்பரசனும் என்னிடம், பிரஷர் எடுத்துக்கொள்ளாமல், எனக்கு பிடித்தவாறு ஜாலியாக வேலையைச் செய்யும்படி கூறினார்.

இதையும் படிங்க : தனுஷ் – எச்.வினோத் கூட்டணியை உறுதி செய்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ் – வைரலாகும் வீடியோ!

அப்படிப் பார்க்கும்போது எனக்கு STR 51 படத்தின் வேலைகள் எனக்கு அழுத்தமாகத் தெரியவில்லை, எனக்கான நேரம், எனக்கான இடம் ஒதுக்கி STR 51 பட வேலைகளைச் செய்துவருகிறேன். அதுபோல படத்தின் பாதி ஸ்கிரிப்டை முடித்துவிட்டால் படமே முடிந்தது போல, அதுவே ஸ்கிரிப்ட் வேலையை முழுமையாக முடித்துவிட்டால் படம் வெற்றி பெற்றதற்கு சமம்” என இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து அந்த நேர்காணலில் கூறியிருந்தார்.

சிலம்பரசன் வெளியிட்ட STR 51 பட பதிவு :

STR 51 படத்தில் சிலம்பரசனின் கதாபாத்திரம் :

இந்த STR 51 படத்தில் சிலம்பரசன் இதுவரை நடித்திடாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த படத்தில் காட் ஆப் லவ் என்ற ரோலில் சிலம்பரசன் நடிக்கவிருப்பதாக, அவரின் பிறந்தநாளை ஒட்டி அறிவிப்பு வெளியானது. இந்த படமானது பேண்டஸி மற்றும் சிலம்பரசனின் ரசிகர்களுக்கு ஏற்ற திரைப்படமாக உருவாகிவருகிறதாம். இந்த படத்தின் ப்ரீ- ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வரும் நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2025, ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்குவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகக் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.