Nani: அவன் பெரு ஜடல்.. நானியின் ‘தி பாரடைஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
The Paradise Movie First Look : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்கள் லிஸ்டில் ஒருவராக இருந்து வருபவர் நானி. தெலுங்கு சினிமாவில் பிரபலமாகி இருக்கும் இவருக்குத் தமிழ் சினிமாவிலும் ரசிகர்கள் அதிகம். இவரின் நடிப்பில் உருவாகிவரும் தி பாரடைஸ் திரைப்படத்திலிருந்து முதல் பார்வை வெளியாகியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் நானி (Nani). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஹிட் 3 (HIT 3). இந்த படமானது கடந்த 2025, மே மாதத்தின் தொடக்கத்தில் வெளியாகி மிக பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றிருந்தது. சுமார் ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சூப்பர் ஹிட் திரைப்படமாக இப்படம் அமைந்திருந்தது. இந்த படத்தை அடுத்ததாக இவரின் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் தி பாரடைஸ் (The Paradise). இந்த திரைப்படத்தை இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா (Srikanth Odela) இயக்கி வருகிறார். மேலும் இவருடன் வினய சாகர் ஜொன்னாலஹரி, கே. சந்துரி இணைந்து இந்த படத்தை உருவாக்கி வருகின்றனர். இந்த படமானது பான் இந்திய மொழி திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் நானி ஆக்ஷ்ன் கேங்ஸ்டராக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் (Anirudh) இசையமைத்து வருகிறார்.
இந்தப் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது இப்படத்தின் முதல் பார்வை மற்றும் கதாபாத்திரத்தின் அறிமுகம் குறித்த போஸ்டரை நானி வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் நடிகர் நானி “ஜடல்” (Jadal) என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம். தற்போது இந்த படத்தின் முதல் பார்வை ஊடகங்களில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : ‘காந்தாரா 2’ படத்தில் ருக்மிணி வசந்த்.. படக்குழு வெளியிட்ட போஸ்டர்!
நடிகர் நானி வெளியிட்ட தி பாடரடைஸ் படத்தின் முதல் பார்வை :
His Name/వాడి పేరు
‘Jadal’
‘జడల్’Calling a spade a spade. #THEPARADISE @odela_srikanth @anirudhofficial @SLVCinemasOffl @Dop_Sai @NavinNooli @artkolla @kabilanchelliah pic.twitter.com/gN3i0fPxv7
— Nani (@NameisNani) August 8, 2025
தி பாரடைஸ் படத்தின் ரிலீஸ் எப்போது :
இந்த தி பாரடைஸ் திரைப்படமானது முற்றிலும் ஆடை கேங்ஸ்டர்ஸ் கதைக்களத்துடன் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் நானி முன்னணி வேடத்தில் நடிக்க, அவருடன் நடிகர்கள் சோனாலி குல்கரனி, ராகவ் ஜுயல் இணைந்து நடிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் டிராகன் பட நடிகை கயாடு லோஹர் இந்த படத்தில், நானிக்கு ஜோடியாக நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் உருவாகி வருகிறது. இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு மார்ச் 26ம் தேதியில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க : தமிழகத்தில் ரஜினிகாந்த்தின் ‘கூலி’ படத்தின் பிரீமியர் காட்சி எப்போது தெரியுமா?
தி பாரடைஸ் திரைப்படத்தின் கதைக்களம் :
இந்த தி பாரடைஸ் திரைப்படத்தின் கதையானது, 1980ம் ஆண்டு செகந்திராபாத் என்ற இடத்தில், ஒதுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் ஒரு தலைவனின் வழிகாட்டுதலில், அவர்கள் ஒடுக்கு முறையை எதிர்க்கின்றன. அந்த ஒடுக்கு முறையை அழிப்பதற்காக மற்றும் குடியுரிமையைப் பெறுவதற்காக, அவர்கள் செய்யும் போராட்டங்கள் போன்ற கதைக்களத்துடன் இப்படமானது உருவாகிவருவதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தின் கதைக்களம் பற்றி ஐஎம்டிபி என்ற இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.