Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Rukmini Vasanth: ‘காந்தாரா 2’ படத்தில் ருக்மிணி வசந்த்.. படக்குழு வெளியிட்ட போஸ்டர்!

Rukmini Vasanth In Kantara 2 Movie : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் ருக்மிணி வசந்த். இவர் தமிழ் மற்றும் கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் காந்தாரா 2 படத்தில் நடித்துள்ளார். இவரின் கதாபாத்திரம் அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது வெளியான போஸ்டர் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

Rukmini Vasanth: ‘காந்தாரா 2’ படத்தில் ருக்மிணி வசந்த்.. படக்குழு வெளியிட்ட  போஸ்டர்!
நடிகை ருக்மிணி வசந்த் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 08 Aug 2025 10:48 AM

நடிகை ருக்மிணி வசந்த் (Rukmini Vasath) தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். கன்னட சினிமாவின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர், தற்போது தமிழிலும் படங்களில் முன்னணி வேடத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழில் கடந்த 2025, மே மாதத்தில் வெளியான ஏஸ் (Ace) படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் இவர் விஜய் சேதுபதிக்கு (Vijay sethupathi) ஜோடியாக நடித்து, மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தார். இதை அடுத்ததாக சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) மதராஸி (Madaraasi) படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதை அடுத்ததாக விக்ரமின் 64வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இவ்வாறு தொடர்ந்து தமிழ்ப் படங்களிலும் ஒப்பந்தமாகி வருகிறார்.

இந்நிலையில், இவர் கன்னட மொழி திரைப்படமான காந்தாரா பாகம் 2 (Kantara 2) படத்திலும் நடித்திருக்கிறார். இவரின் கதாபாத்திரம் அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. காந்தாரா 2 படத்தில் நடிகை ருக்மிணி வசந்த், “கனகவதி” (Kanakavathi) என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகப் படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது வெளியான இந்த அறிவிப்பானது ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க : தமிழகத்தில் ரஜினிகாந்த்தின் ‘கூலி’ படத்தின் பிரீமியர் காட்சி எப்போது தெரியுமா?

ரிஷப் ஷெட்டி வெளியிட்ட நடிகை ருக்மிணி வசந்த் போஸ்டர் :

இந்த போஸ்டரை நடிகை ருக்மிணி வசந்த், ராணி வேடத்தில் இருப்பது போல காட்சியளிக்கிறது. இவர் இந்த படத்தில் கனகவதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இவரின் நடிப்பில் முதன் முறையாக உருவாகியிருக்கும் பிரம்மாண்ட திரைப்படமாக காந்தாரா பாகம் 2 படமானது உள்ளது.

காந்தாரா 2 திரைப்படம் :

பிரபல கன்னட நடிகர் மற்றும் இயக்குநராக இருந்து வருபவர் ரிஷப் ஷெட்டி. இவரின் இயக்கத்தில், பான் இந்திய மொழி திரைப்படமாக உருவாகியிருப்பதுதான் காந்தாரா 2 திரைப்படம் . இந்த படமானது கடந்த 2022ம் ஆண்டு வெளியான காந்தாரா 1 படத்தில் தொடர்ச்சி கதைக்களத்துடன் உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 1 வருடத்திற்கு மேலாக இந்தியாவில் பல்வேறு இடங்களில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று வந்தது.

இதையும் படிங்க : அஜித் குமாரின் AK64.. இரண்டு நடிகைகளா? வைரலாகும் தகவல்!

அதை தொடர்ந்து கடந்த 2025ம் ஜூலை மாதத்தின் தொடக்கத்தில், இப்படத்தின் படப்பிடிப்பும் முழுமையாக நிறைவடைந்தது. இப்படமானது வரும் 2025, அக்டோபர் 2ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் 2 மாதங்கள் மற்றும் இருக்கும் நிலையில், படத்தின் தகவல்களைப் படக்குழு வெளியிட்டு வருகிறது.