Coolie FDFS : தமிழகத்தில் ரஜினிகாந்த்தின் ‘கூலி’ படத்தின் பிரீமியர் காட்சி எப்போது தெரியுமா?
Coolie Movie Premiere Show Timing Update : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 171வது திரைப்படமாக உருவாகியிருக்கும் படம் கூலி. இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில், இந்த படத்தில் தமிழகத்தின் பிரீமியர் முதல் ஷோ எப்போது என்பதைப் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கிய படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது. அந்த வகையில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் (Rajinikanth) கூட்டணியில் இணைந்த திரைப்படம்தான் கூலி (Coolie). இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னணி கதாநாயகனாக நடிக்க, அவருடன் பான் இந்திய மொழி நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த கூலி திரைப்படமானது ரஜினிகாந்த்தின் 171வது படமாக உருவாகியுள்ளது. அதை தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங் இந்தியாவில் பல்வேறு இடங்களில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வந்தது. இந்த படமானது வரும் 2025. ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் பிரீமியர் காட்சிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி இந்த படத்தின் தமிழக பிரீமியர் காட்சி (Tamil Nadu Premiere Show), வரும் 2025, ஆகஸ்ட் 14 ஆம் தேதி காலை 9 மணிமுதல் வெளியிடப்படவுள்ளதாம். மேலும் கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் காலை 6 மணி பிரீமியர் காட்சி வெளியாகவுள்ளதாம். இது குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : அருண் விஜய்யின் ‘ரெட்ட தல’ – அதிரடி டீசர் இதோ!
கூலி படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் பதிவு :
Action-packed #Coolie (Kannada) Trailer is out now!💥😎
▶️ https://t.co/TcIkTeZ2Sq#Coolie releasing worldwide August 14th @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja @anbariv… pic.twitter.com/GuK64Hxya3
— Sun Pictures (@sunpictures) August 7, 2025
கூலி திரைப்படத்தின் தமிழக ப்ரீ புக்கிங் எப்போது :
நடிகர் ரஜினிகாந்த் முன்னணி நாயகனாக நடித்திருக்கும் இப்படமானது, அதிரடி ஆக்ஷ்ன் கதைக்களத்துடன் உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், அமீர்கான், உபேந்திரா, சௌபின் சாஹிர் மற்றும் நாகார்ஜுனா என பான் இந்திய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் மேலும் முன்னணி பிரபலம் ஒருவரும் கேமியோ ரோலில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த கூலி படமானது ஒட்டுமொத்த இந்தியா அளவிற்குப் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க : சிவகார்த்திகேயன் ‘மதராஸி’ படத்துடன் மோதும் அனுஷ்காவின் ‘காதி’ – வசூலில் வெல்லப்போவது யார்?
இப்படத்தின் டிக்கெட் ப்ரீ புக்கிங்கானது வெளிநாடுகளில் தொடங்கியுள்ளது. இதை அடுத்து இந்தியாவில் வரும் 2025, ஆகஸ்ட் 10 ஆம் தேதி தொடங்கும் எனக் கூறப்படுகிறது. இது குறித்துப் படக்குழு இன்னும் அறிவிப்புகளை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும் நிலையில், முதல் நாளிலே சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.