சீனாவில் புத்தாண்டை முன்னிட்டு குரங்குகளுக்கான தேவை திடீரென அதிகரித்துள்ளது. உயிரியல் மற்றும் மருத்துவ ஆய்வுகளுக்காக பயன்படுத்தப்படும் குரங்குகளின் தட்டுப்பாடு காரணமாக, ஒரு குரங்கின் விலை 25 லட்சம் வரை உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 25 ஆயிரம் குரங்குகள் உயிரியல் மற்றும் மருந்து சோதனைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஆண்டு, தடுப்பூசிகள் மற்றும் புதிய மருந்துகளுக்கான சோதனைகளுக்கு அரசு கூடுதல் முக்கியத்துவம் அளித்துள்ளதால், குரங்குகளுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.