17 வயது சிறுவன் ஒருவர் தனது தாயின் 10,000 பவுண்ட் கடனை முழுமையாக அடைத்து, அவருக்கு அதிர்ச்சி அளித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த உணர்ச்சிப் பதிவை Aman Duggal இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், அமன் தனது தாயிடம் தனது அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்துகிறார். இது தான் நீண்ட நாட்களாக செய்ய வேண்டும் என்று நினைத்த விஷயம் என்றும், “அம்மா, நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்” என்றும் அவர் கூறுகிறார். உணர்ச்சியும் பதற்றமும் கலந்த நிலையில், அவர் செய்த அனைத்திற்கும் நன்றி தெரிவிக்கும் அமன், தனது வாழ்க்கையில் “மிகவும் சிறப்பு வாய்ந்த பெண்” தாயே என கூறுகிறார்.