இந்திய கிரிக்கெட் அணிக்கான 2026 ஆம் ஆண்டு முழு கிரிக்கெட் அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதன் படி இந்த ஆண்டில் இந்திய அணி, ஒருநாள், டெஸ்ட் மற்றும் இருபது ஓவர் ஆகிய மூன்று வடிவங்களிலும் மொத்தம் 49 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான இந்திய அணியின் கிரிக்கெட் பயணம், ஜனவரி 11 அன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடருடன் தொடங்குகிறது.