Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பணப்பெட்டியை எனது சுயநினைவோடுதான் எடுத்தேன்- விஜய் சேதுபதி முன் எமோஷனலாக பேசிய கானா வினோத்!

Bigg Boss Tamil 9 Ganaa Vinoth: தமிழில் சிறப்பான நிகழ்ச்சியில் ஒன்றாக இருப்பது பிக் பாஸ் சீசன். இந்த நிகழ்ச்சியானது இறுதிக்கட்டத்திற்கு எட்டிய நிலையில், பணப்பெட்டியுடன் கானா வினோத் வெளியேறியுள்ளார். இந்நிலையில் அவர் விஜய் சேதுபதியின் முன் எமோஷனலாக பேசிய புரோமோ தற்போது வைரலாகிவருகிறது.

பணப்பெட்டியை எனது சுயநினைவோடுதான் எடுத்தேன்- விஜய் சேதுபதி முன் எமோஷனலாக பேசிய கானா வினோத்!
பிக் பாஸ் தமிழ் 9
Barath Murugan
Barath Murugan | Published: 10 Jan 2026 18:11 PM IST

நடிகர் விஜய் சேதுபதியின் (Vijay Sethupathi) தொகுப்பில் மக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றவரும் நிகழ்ச்சிதான் பிக் பாஸ் சீசன் 9 தமிழ் (Bigg Boss Season 9 Tamil). இந்த நிகழ்த்தியானது தொடங்கி இன்றுடன் (2026 ஜனவரி 10ம் தேதி) கிட்டத்தட்ட 97 நடக்கலை கடந்துள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த் நிகழ்ச்சியானது நிறைவு பெருவுள்ள நிலையில், இந்த வாரம் முழுவதும் செலிபிரேஷன் வாரமாகவே அமைந்திருந்தது. அதன்படி இந்த பிக் பாஸ் சீசன் 9ன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பழைய போட்டியாளர்களும் ரீ எண்டரி கொடுத்திருந்தனர். பழைய போட்டியாளர்கள் வந்த நிலையில், கலகலப்பாக போகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த் நிகழ்ச்சியானது, சண்டையுடன்தான் நடந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இந்த பிக் பாஸ் வீட்டில் பணப்பெட்டி டாஸ்க் சிறப்பாகவே நடந்தது. இதில் காண வினோத் (Ganaa Vinoth) பணப்பெட்டியை எடுத்திருந்தார்.

இதை எடுக்கும் முன் அரோரா (Aurora) அவரிடம் பணப்பட்டியை எடுக்கவைக்கும் விதத்தில் பேசியிருந்த நிலையில், அதன் காரணமாகத்தான் கானா வினோத் அதை எடுத்திருந்தார் என கூறப்பட்டுவந்தது. இந்நிலையில் 97வைத்து நாளில் வெளியான 2வது ப்ரோமோவில் கானா வினோத் பணப்பெட்டி குறித்து எமோஷனலாக பேசியுள்ளார். அதில் அவர், பணப்பெட்டியை தனது சுயநினைவோடுதான் எடுத்ததாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தீ பரவியதா? சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் எப்படி இருக்கு? விமர்சனங்கள் இதோ!

பிக் பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியின் 97வது நாளின் 2வது புரோமோ :

இந்த புரோமோவில் விஜய் சேதுபதி முன் பேசிய கானா வினோத் , ” இது எமோஷனல் கலந்த ஆனந்த கண்ணீராக இருக்கு. மேலும் ஆதரவு தெரிவித்த எல்லா மக்களுக்கும் நன்றி என கூறியிருந்தார். நான் எடுத்த 18 லட்சம் எனது குடும்பத்திற்கு மற்றும் நான் பட்ட கஷ்டத்திற்கு தேவைப்படும் காசாக இருந்தது. உண்மையை சொல்லுகிறேன் நான் யார் சொல்லிய எடுக்கவில்லை, எனது சுயநினைவோடுதான் எடுத்தேன்” என கூறினார்.

இதையும் படிங்க: கப்பு முக்கியம் பிகிலே’.. விஜய் ரசிகர்களிடையே வைரலாகும் சூர்யாவின் வீடியோ!

மேலும் கானா வினோத்தின் மனைவி மேடையில் பேசியிருந்தார், அதில் அவர், “கானா வினோத்தின் திறமைக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை என நினைத்தேன், இந்த மேடையில் அது கிடைத்திருக்கிறது. உண்மையில் எங்களுக்கு இது போதும் சார்” என அவர் விஜய் சேதுபதியிடம் தெரிவித்திருந்தார். தற்போது இது தொடர்பான வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது