Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Theri: விரைவில் திரையில்… தெறி பட ரீ-ரிலீஸ் தேதியை அறிவித்த தயாரிப்பாளர்

Theri Movie Re-release Update : தென்னிந்திய சினிமாவில் சிறப்பான நாயகனாக இருந்துவருபவர்தான். தளபதி விஜய். இவரின் நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டில் வெளியான படம்தான் தெறி. இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 10 ஆண்டுகளை தொட்ட நிலையில், இப்படம் ரீ -ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Theri: விரைவில் திரையில்… தெறி பட ரீ-ரிலீஸ் தேதியை அறிவித்த தயாரிப்பாளர்
தெறி பட ரீ-ரிலீஸ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 10 Jan 2026 17:49 PM IST

நடிகர் தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) நடிப்பில் தமிழ் சினிமாவில் மிக பிரம்மாண்ட படங்கள் எல்லாம் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இவரின் கடைசி படமாக ஜன நாயகன் (Jana Nayagan) திரைப்படம் தயாராகியுள்ளது. இந்த படத்தை ஹெச்.வினோத் (H.Vinoth) இயக்கியுள்ள நிலையில், மிக பிரம்மாண்ட கதைக்கத்தில் தயாராகியுள்ளது. இப்படம் 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவிருந்த நிலையில், சென்சார் பிரச்சனையின் காரணமாக ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்ததாக 2026 ஜனவரி 9ம் தேதியில் சில திரையரங்குகளில் விஜய்யின் பழைய படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. இந்த சென்சார் பிரச்சனை தற்போது மிகவும் பெரிதாக பார்க்கப்பட்டுவரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் ஜன நாயகன் படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என இன்னும் தெரியவில்லை. அந்த வகையில் தற்போது விஜய்யின் தெறி (Theri) படமானது விரைவில் ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

இப்படம் கடந்த 2016ம் ஆண்டில் வெளியாகியிருந்த நிலையில், கிட்டத்தட்ட 10 ஆண்டுகளை நெருங்கியுள்ளது. இதை முன்னிட்டு இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாகவும்,  அந்த வகையில் இப்படம் 2026 ஜனவரி 15ம் தேதியில் வெளியாகவுள்ளதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு (Kalaipuli S Thanu) அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சொன்ன தேதியில் ஜனநாயகன் வெளியாகாததற்கு என்ன காரணம்? தயாரிப்பாளர் வெளியிட்ட வீடியோ

தெறி பட ரீ-ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வெளியிட்ட எஸ்கே பதிவு :

இயக்குநர் அட்லீயின் இயக்கத்தில் தளபதி விஜய் முதல் முறையாக இணைந்த திரைப்படம்தான் தெறி. இதில் விஜய் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகைகள் சமந்தா மற்றும் எமி ஜாக்சன் என இரு நடிகைகள் நடித்திருந்தனர். இதில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தியிருந்தார். இப்படமானது பெண்கள் பிரச்சனை, ஆக்ஷன், காதல் போன்ற கதைக்களத்தில் கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார், இவரின் இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சிறப்பான வரவேற்பையே பெற்றிருந்தது.

இதையும் படிங்க: ‘கப்பு முக்கியம் பிகிலே’.. விஜய் ரசிகர்களிடையே வைரலாகும் சூர்யாவின் வீடியோ!

இந்த படமானது விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் வெளியாகி மிக பிரம்மாண்ட வரவேற்பை கொடுத்திருந்தது. 10 வருடங்களுக்கும் முன்பே சுமார் ரூ 150 கோடிகளுக்கு மேல் வசூலித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த 2026ம் ஆண்டில் இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அறிவித்துள்ளார். இந்நிலையில் ஜன நாயகன் பட ரிலீஸ் தள்ளிப்போன நிலையில், இப்படம் 2026 ஜனவரி 15ல்  ரீ-ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
.