Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Parasakthi: தீ பரவியதா? சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் எப்படி இருக்கு? விமர்சனங்கள் இதோ!

Parasakthi Movie X Review: நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் 2026ம் ஆண்டின் பெரிய பட்ஜெட்டில் தயாராகியிருந்த படம்தான் பராசக்தி. இந்த படமானது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று 2026 ஜனவரி 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள எக்ஸ் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.

Parasakthi:  தீ பரவியதா? சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் எப்படி இருக்கு? விமர்சனங்கள் இதோ!
பராசக்தி திரைப்பட விமர்சனம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 10 Jan 2026 10:46 AM IST

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இளம் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவரின் நடிப்பில் மற்றும் இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் பராசக்தி (Parasakthi). இந்த படமானது கடந்த 1964ம் ஆண்டில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் கதாநாயனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீலீலா (Sreeleela) நடித்துள்ளார் மேலும் இப்படத்தில் நடிகர்கள் ரவி மோகன் (Ravi Mohan), ராணா, பேசில் ஜோசப் மற்றும் அதர்வா (Athrvaa) உட்பட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது 64ல் நடந்த இந்தி மொழித் திணிப்பிற்கு எதிரான போராட்டத்தை மையமாக கொண்டு தயாராகியுள்ளது. இந்த படத்தை டான் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க, ஜிவி. பிரகாஷ் குமார் (GV.Prakash kumar) இசையமைத்துள்ளார்.

இந்த படமானது இன்று 2026 ஜனவரி 10ம் தேதியில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பான் இந்திய படமாக தயாராகியுள்ளது. தமிழகத்தில் காலை 9 மணி முதல் FDFS காட்சிகள் திரையிடப்பட்ட நிலையில், இந்தியாவில் பல்வேறு இடங்களில் அதிகாலை 7 மணி முதல் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு ரசிகர்கள் வெளியிட்டுள்ள எக்ஸ் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் பரசாக்தி பட முதல் பாதி எப்படி இருக்கு? எக்ஸ் பக்க விமர்சனங்கள் இதோ

பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பு எப்படி:

இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள “செழியன்” கதாபாத்திரம் மிகவும் நன்றாக உள்ளதாம். மேலும் இந்த படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் தனது சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் மக்களுக்கு சிவகார்த்திகேயனின் கதாபாத்திரத்தை விடவும் ரவி மோகன் நடித்திருக்கும் வில்லன் ரோல் “திருநாதன்” என்ற கேரக்டர் மிகவும் வரவேற்பை பெற்றுவருகிறது.

படத்தில் ஜிவி. பிரகாஷ் குமாரின் இசையமைப்பு எப்படி வேலை செய்துள்ளது :

இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பு எந்தளவிற்கு முக்கியமானதோ அதுபோல படத்தில் ஜி.வி.பிரகாஷின் இசை மிகவும் முக்கிய பங்கற்றியுள்ளது. படத்தின் சண்டைக்காட்சிகளில் ஜி.வி.பிரகாஷின் இசைதான் மிகவும் சிறப்பாக காட்டியுள்ளது. ஆக மொத்தத்தில் ஜி.வி. பிரகாஷ் தனது 100வது படத்திற்காக சிறப்பாகவே இசையமைத்துள்ளார்.

சுதா கொங்கராவின் எழுத்து மற்றும் ரவி மோகனின் கதாபாத்திரம் :

இந்த படமானது தமிழ் மொழியை மையமாக கொண்டு, தமிழ் மாணவர்கள் செய்த உயிர் தியாகத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது . இந்த படம் தமிழில் தமிழ் மாணவர்கள் போராடுவதுபோன்று காட்டப்பட்டிருந்தாலும், மற்ற மொழிகளில், குறிப்பாக தெலுங்கில், தெலுங்கு மாணவர்கள் இந்தி திணிப்பிற்காக போராடுவதுபோன்று காட்டப்பட்டுள்ளது. சுதா கொங்கரா ஒரு துணிச்சலான மற்றும் நேர்மையான விஷயத்தைத் தேர்ந்தெடுத்தார், ஆனால் எழுத்து மற்றும் திரைக்கதையில் மோசமாகத் தடுமாறியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் கதையானது மெதுவாக நகர்வதுபோலவும் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதில் ரவி மோகனின் நடிப்பே ஹீரோவை விடவும் சிறப்பாக இருக்கும் நிலையில், மக்கள் ரசித்துவருகின்றனர்.

பராசக்தி படத்தை திரையரங்கு சென்று பார்க்கலாமா :

இந்த பராசக்தி படம் சிவகார்த்திகேயனின் 25வது படம் என்ற நிலையில், மிகவும் பிரம்மாண்டமாகவே தயாராகியுள்ளது. இதில் கதாநாயகி ஸ்ரீலீலாவின் கதாபாத்திரம் மற்றும் அவர்கள் இருக்கும் காதல் காட்சிகள் நன்றாக இல்லை என கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் காட்சிகள் பல பொறுமையை சோதிக்கும் விதத்தில் அமைந்துள்ளதாம்.

இதையும் படிங்க: சொன்ன தேதியில் ஜனநாயகன் வெளியாகாததற்கு என்ன காரணம்? தயாரிப்பாளர் வெளியிட்ட வீடியோ

இப்படத்தில் சண்டை காட்சிகளும் நன்றாக வந்துள்ளதாம். ஆக மொத்தத்தில் இந்த படமானது வெளியான முதல் நாளிலே கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது. நிச்சயமாக இப்படத்தை பேமிலியுடன் தியேட்டரில் சென்று ஒரு முறை பார்க்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.